அடுத்து அடுத்து கைது - தொடரும் மதுவிலக்கு டிஎஸ்பியின் அதிரடி நடவடிக்கைகள் - எங்கே தெரியுமா?

11 months ago 7
ARTICLE AD

மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோத மது, சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 22 பேரை மது விலக்கு காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

எஸ்.பி. உத்தரவு

மயிலாடுதுறை மாவட்டம் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திற்கு அருகே அமைந்துள்ளது. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வெளி மாநில மதுபானங்கள் மற்றும் சாராயங்கள் கடத்திவரப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் சட்டவிரோத மது, சாராய உள்ளிட்டவை விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து மதுவிலக்கு துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் அன்னை அபிராமி மற்றும் ஜெயா ஆகியோர் தலைமையில் மதுவிலக்கு காவல்துறையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள வெளிமாநில மதுபானங்கள்

அதில், அண்டை மாநிலமான புதுச்சேரி மது பாட்டில்கள் மற்றும் வெளி மாநில சாராயம் கடத்திய மயிலாடுதுறை மாவட்டம் கோனேரிராஜபுரத்தை சேர்ந்த 45 வயதான சுந்தரராஜன், இளையாளூரை சேர்ந்த 58 வயதான சவுந்தரராஜன், காளியை சேர்ந்த 50 வயதான ரவிச்சந்திரன், கீழையூரை சேர்ந்த 38 வயதான மணிகண்டன், கொள்ளிடத்தை சேர்ந்த 48 வயதான பரமசிவம், கழனி வாசலை சேர்ந்த 61 வயதான கல்யாணகுமார் அனந்தமங்கலத்தை சேர்ந்த 54 வயதான மணி, சீர்காழியை சேர்ந்த 50 குமுதவல்லி, 26 வயதான சுரேந்தர், பனங்காட்டங் குடியை சேர்ந்த 58 வயதான சங்கர், ஆனந்ததாண்டவபுரத்தை சேர்ந்த 54 வயதான மார்ட்டின், சீர்காழியை சேர்ந்த 26 வயதான செல்வம், காழியப்பநல்லூரை சேர்ந்த 50 வயதான செல்லதுரை என இளைஞர், முதியவர், இளைஞர்கள் என பாகுபாடு இன்றி போதைப் பொருட்கள் சார்ந்த குற்றங்களில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டனர்.

saif ali khan: கணவர் சயிஃப் அலி கானை குத்தியது யார்? மனைவி கரினா கபூர் தகவல், ஆனால் காவல்துறை சொல்வது வேறா?

இருசக்கர வாகனத்தில் மதுபானங்கள் கடத்தல்

மேலும் இதுபோன்று மயிலாடுதுறையை சேர்ந்த 23 வயதான அரவிந்தன், நீடூரை சேர்ந்த 51 வயதின சங்கர், கொள்ளிடத்தை சேர்ந்த 24 வயதான சூரியபிரகாஷ் ஆகியோரிடம் இருந்த இருசக்கர வாகனங்களில் கடத்தி வரப்பட்ட 230 புதுச்சேரி மதுபாட்டில்கள், 231 லிட்டர் புதுச்சேரிசாராயம் வாகனங்களுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

Virat Kohli: யூடர்ன் போட்ட பிசிசிஐ.. மீண்டும் பழைய விதிகள் அமலாகிறதா? கோலி கேப்டன்சி சம்பவங்கள்..!

கஞ்சா விற்பனை

மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அளக்குடியை சேர்ந்த அறிவழகன், பழுதூரை சேர்ந்த 23 வயதான சுபிந்தேசன், மயிலாடுதுறையை சேர்ந்த கார்த்திக், விஜய், சீர்காழியை சேர்ந்த 39 வயதான அய்யப்பன், மற்றும் 55 வயதான கொளஞ்சிநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த 22 பேரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

ISRO Spadex; சாதித்த இந்தியா.. 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு

புதிய டிஎஸ்பியின் அதிரடி

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, புதிதாக மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கத்துறை துணை காவல் கண்காணிப்பாளராக சுந்தரேசன் என்பவர் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து அவரின் அதிரடி நடவடிக்கையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்கள் குறைந்து வருவதாக கூறி சமூக ஆர்வலர்கள் பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article