அடுத்தவர் வீட்டின் கதவை மூட திருமாவளவன் யார்? - விளாசிய நயினார் நாகேந்திரன்!

7 months ago 5
ARTICLE AD

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய கடந்தாண்டு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொகுதி என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதா?.. மக்கள் மனதில் மாற்றம் நிகழ்ந்து இருக்கிறது. முறையாக அனுமதி கேட்டு ஒருவாரமாகிறது. ஆட்சி உங்களுக்கு நிரந்தரமானது அல்ல. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்." என்றார். தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், அடுத்தவர் வீட்டின் அதிமுக கூட்டணி கதவை மூட திருமாவளவன் யார்? வேண்டுமானால் திருமாவளவன் அவர் வீட்டு கதவை மூடிக்கொள்ளட்டும் என்று தெரிவித்தார். முன்னதாக, கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு எனக்கூறி கூட்டணிக்கு அழைத்த அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் கதவுகளை மூடிவிட்டதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருந்த நிலையில், நயினார் நாகேந்திரன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

Read Entire Article