அடுக்குமாடி குடியிருப்பில் அடிக்கடி உல்லாசம் !! நிர்வாணமாக புகைப்படம் எடுத்த இளைஞர் !!

3 months ago 14
ARTICLE AD

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பழக்கம்

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவி ( கவிதா - பெயர் மாற்றப்பட்டுள்ளது ) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2025 குடியிருப்பில் உள்ள 4 - வது மாடியில் சங்கீதா என்பவர் அவரது மகன் உடன் குடியேறியுள்ளார்.

அப்போது சங்கீதா , கவிதாவிடம் பேசி பழகி வந்திருக்கிறார். இருவரும் நன்றாக பழகி வந்த நிலையில் கவிதா அடிக்கடி சங்கீதா வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதற்கிடையில் சங்கீதாவின் மகன் திலீப்புக்கும் , கவிதாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் உல்லாசம் - புகைப்படம் எடுத்து மிரட்டல்

பின்னர் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இருவருக்கும் இடையே திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் இருந்து வந்திருக்கின்றனர். மேலும் இருவரும் பழகி வந்த நிலையில் திலீப் தனக்கு பணம் தேவைப்படும் போது கவிதாவிடமிருந்து தங்கம் மற்றும் வைர நகைகள் உள்ளிட்ட சுமார் 850 கிராம் தங்கம், 120 கிராம் வைர நகைகள் , 2 கிலோ வெள்ளி , மற்றும் ரூ.20,000 பணம் ஆகியவற்றை பெற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. கவிதா மீண்டும் அந்த பணத்தை கேட்ட போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

நிர்வாண புகைப்படம் - சமூக வலைத்தளங்களில் மிரட்டல்

அதனை தொடர்ந்து திலீப் , கவிதா இருவரும் தனிமையில் இருந்த போது எடுத்த அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோ உள்ளிட்டவற்றை சமூக வலைத் தளங்கள் வெளியிடுவதாக மிரட்டி மேலும் பணத்தை கேட்டு மிரட்டி வந்திருக்கிறார். இது குறித்து கவிதா கணவர் அறிந்து பணம் மற்றும் நகைகளை திருப்பி கேட்ட போது திலீப் மற்றும் அவரது தாய் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீட்டை காலி செய்து கொண்டு சென்றிருக்கின்றனர்.

பின்னர் பல முறை செல்போனில் அழைத்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தன்னிடம் பெற்ற தங்கம் மற்றும் வைர நகைகளை வாங்கித் தருமாறும், மேலும் தன்னுடன் இருந்த நிர்வாண போட்டோ வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக கூறி மிரட்டி வரும் திலீப் மற்றும் அவரது தாய் மீது நடவடிக்கை எடுக்குமாறு நேற்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஏற்கனவே திலீப் மீது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமூக வலை தளம் மூலம் பழகி பெண்களிடம் விமான பணிப்பெண் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த புகார் இருப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் தொழிலதிபர் மனைவியிடம் நெருங்கி பழகி நகை பணத்தை மோசடி செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமறைவாக உள்ள திலீப்பை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Read Entire Article