ARTICLE AD
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாஜக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நயினார், "பாஜக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பது குறித்து தெரியவில்லை. பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா சந்திப்பிற்கு பின் காமாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ளேன். தற்போது பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். நாளை கோட்டையில் சந்திக்கிறேன்". என்றார். நடிகர் அஜித் ‘பத்ம பூஷண்’ விருது பெற்றது குறித்து பேசிய அவர், சிறந்த நடிகருக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது என்று தெரிவித்தார்.
