தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிபிராஜ். பிரபல நடிகர் சத்யராஜின் மகனான இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டென் ஹவர்ஸ். இந்த படம் வரும் 18ம் தேதி ரிலீசாகிறது.

விஜய் சொன்னதை ஏற்க முடியாது:

இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக தனியார் யூ டியூப் சேனலுக்கு சிபிராஜிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, விஜய்யிடம் கூற வேண்டுமென்றால் என்ன கேட்பீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் சிபி சத்யராஜ், அவரிடம் கேட்க வேண்டுமென்றால் எங்களுக்காக ப்ளீஸ் இனிமேல் படங்களும் நடியுங்கள். என்னதான் அவருக்கு நம்ம ஆதரவு இருந்தாலும் ரசிகராக அவர் இனிமேல் நடிக்க மாட்டேன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

அவ்வப்போது, சினிமாவிலும் பண்ணுங்கள் என்பதே எனது வேண்டுகோள். அவரிடம் கேட்க வேண்டுமென்றால் இளமைத் தோற்றத்தை எப்படி பராமரிப்பது என்று கேட்பேன் என்றார்.

அஜித்திற்கு தைரியம்:

மேலும், அஜித்திடம் கேட்க வேண்டுமென்றால் ஏன் சார் உங்களுக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கும்போது ஒரு ஆபத்தான விளையாட்டு மீது ஏன் உங்களுக்கு இந்தளவு விருப்பம் உள்ளது என்று கேட்பேன். நான் அவரின் படங்களை விரும்பி பார்த்திருக்கிறேன்.

விடாமுயற்சி படம் என்பது இப்படி ஒரு மாஸ் உள்ள ஹீரோ இதுபோன்று செய்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதற்கு அவரை நான் பாராட்டுவேன். விடாமுயற்சி படம் ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்டது. அந்த படம் ஒரு வளர்ந்து வரும் ஹீரோவிற்கு செட் ஆகும் கதை. அதை ஒரு மாஸ் ஹீரோ எடுத்து செய்கிறார் என்றால் அதற்கு ஒரு தைரியம் வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், நடிகர் ரஜினிகாந்துடன் சிபிராஜின் தந்தை சத்யராஜ் இணைந்து நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு மிகவும் ஜாலியாக செல்கிறது என்றும் கூறினார். நடிகர் சிபிராஜ் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடிக்க பல ஆண்டுகளாக போராடி வருகிறார்.

இந்த நிலையில், இவரது டென் ஹவர்ஸ் படம் வரும் 18ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் சிபிராஜுடன் கஜராஜ், திலீபன், ஜீவா ரவி, சரவணன் சுப்பையா, ராஜ் ஐயப்பா நடித்துள்ளனர். இந்த படத்தை இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். 10 மணி நேரத்தில் நடைபெறுவது போல இந்த திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர். துப்பறியும் கதையாக இந்த கதை அமைந்துள்ளது.