பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

3 சக்கரம் அல்லது 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், வேளாண் கருவிகள் வைத்திருப்போர் வீடு பெற தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சந்திர சேகர் பதிலளித்துள்ளார்.

மேலும், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கடன் பெற தகுதி உள்ள கிஷான் கடன் அட்டை வைத்திருப்போர் வீடு பெற இயலாது. அரசு ஊழியர் குடும்பத்தினரும் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் பயன்பெற முடியாது. வேளாண் சாரா தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் ரூ. 15 ஆயிரத்துக்கு மேல் ஊதியம் பெறுபவர்கள் வீட்டு வசதி திட்டத்தில் பயன்பெற இயலாது.

வருமான வரி, தொழில் வரி செலுத்துபவர்களும் பி.எம்.ஏ.ஒய். திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியற்றவர்கள்.

பாசன வசதியுள்ள 2.5 ஏக்கர், பாசன வசதி இல்லாத 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் இந்த வீடு கட்டும் திட்டத்தில் பயன் பெற முடியாது. செங்கல் சுவர்கள் கூரை மற்றும் இரு அறைகள் கொண்ட வீட்டில் குடியிருப்போரும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பயன்பெற முடியாது. என அமைச்சர் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்று நடந்த ராஜ்யசபா கூட்டத்தில் உத்தரபிரதேசத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 13% வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் இரண்டாவது அதிக நகர்ப்புற மக்கள்தொகையைக் கொண்ட உத்தர பிரதேசத்தில், 2019-20 மற்றும் 2023-24 க்கு இடையில் 1.15 மில்லியன் (11,49,711) வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கைகளின்படி, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பெற்ற மாநிலங்களாக திகழ்கின்றன. கணிசமான வித்தியாசத்தில் முறையே 6,85,865, 6,80,691 மற்றும் 6,63,609 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.