அகமதாபாத் விபத்து.. அடையாளம் காணப்பட்ட 80 உடல்கள்.. விஜய் ரூபானி உடல் இன்று அடக்கம்

6 months ago 5
ARTICLE AD

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளான சம்பவம் நிகழ்ந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 80 பேர் டிஎன்ஏ பொருத்தம் மூலம் அடையாளம் காணப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள்  உறுதிப்படுத்தினர்.

ரூபானியின் உடல் ஒப்படைப்பு:

நேற்று வரை  33 உடல்களை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை  லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI-171 இல் விபத்தில் சிக்கியது இதில்  242 பயணிகளில் ரூபானியும் ஒருவர்.ரூபானியின் மறைவுக்கு குஜராத் அரசு இன்று திங்கள்கிழமை மாநில துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. அவரது இறுதி ஊர்வலம் மாலையில் ராஜ்கோட்டில் நடைபெறும்.

ஏர் இந்தியா விமான விபத்து:

வியாழக்கிழமை மதியம் 1:39 மணிக்கு சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மோதியது. இந்த விபத்தில் இதுவரை விமான பயணிகளை தவிர்த்து விடுதியில் இருந்த  29 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது, இதில் ஐந்து எம்பிபிஎஸ் மாணவர்கள் அடங்குவர். விமானத்தில் இருந்த ஒரு பயணி மட்டுமே அதிசயமாக உயிர் தப்பினார்.

டிஎன்ஏ பொருத்தம்

"டிஎன்ஏ பொருத்தம் மூலம் இதுவரை மொத்தம் 80 விமான விபத்தில் பலியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 33 பேரின் உடல்கள் அந்தந்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன" என்று கூடுதல் சிவில் கண்காணிப்பாளர் டாக்டர் ரஜ்னிஷ் படேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அகமதாபாத், வதோதரா, கேடா, போடாட் மற்றும் பிற இடங்களைச் சேர்ந்த உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.

தொடர்ந்து சிகிச்சை:

இந்த சம்பவத்தில் காயமடைந்த 51 பேரில் 38 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 13 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அரசு நடத்தும் பிஜே மருத்துவக் கல்லூரியின் அறுவை சிகிச்சை பேராசிரியர் டாக்டர் படேல் தெரிவித்தார்.

பிஜே மருத்துவக் கல்லூரி ஜூனியர் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் தவல் கமேட்டியின் தகவலின்படி, விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 270 உடல்கள் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன.

உறவினர்களுக்காக காத்திருப்பு:

மாநில நிவாரண ஆணையர் அலோக் குமார் பாண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில், விமானத்தில் இறந்த 230 பயணிகளின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டுள்ளோம்.

"இறந்த மூன்று பயணிகளின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வெளிநாட்டில் வசிப்பதால் இன்னும் தங்கள் டிஎன்ஏ மாதிரிகளை வழங்கவில்லை. அவர்கள் நாளை மாலை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறந்தவர்களின் உடல்களுடன், பின்னர் அவர்கள் எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக, இறப்புச் சான்றிதழ்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்கிறோம்," என்று பாண்டே கூறினார்.

விபத்துக்கான காரணம்-விசாரணை

விபத்துக்கான காரணங்கள் குறித்து விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) முழுமையான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மேகனிநகரில் விபத்து நடந்த இடத்தில் AAIB குழுவிற்கு மாநில காவல்துறை உட்பட பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் உதவி வருகின்றன.

மத்திய அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட பல்துறை குழுவின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

3 மாதங்களுக்குள் அறிக்கை:

மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையிலான குழு, விமான விபத்துக்கான "மூல காரணத்தை" கண்டறியவும், இயந்திர செயலிழப்பு, மனித பிழை மற்றும் ஒழுங்குமுறை இணக்கங்கள் உள்ளிட்ட ஏதேனும் பங்களிப்பு காரணிகளை மதிப்பிடவும் கடமைப்பட்டுள்ளது. இந்தக் குழு மூன்று மாதங்களுக்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

Read Entire Article