இந்திய அணி டி20 உலக கோப்பை மற்றும் 50 ஓவர் உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த இந்திய முன்னாள் வீரர் யுவராஜ் சிங் இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இளமை காலம்:

சண்டிகரில் டிசம்பர் 12 1981-ல் பிறந்தார் யுவராஜ் சிங். இவர் அங்குள்ள டிஏவி பப்ளிக் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார் அதன் பிறகு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் உள்ள டி ஏ வி கல்லூரியில் தனது வணிகவியல் பட்டப்படிப்பை முடித்தார்.

தனது சிறுவயதில் டென்னிஸ் மற்றும் ஸ்கேட்டிங் ஆகிய விளையாட்டுகளில் தேர்ந்தவராக இருந்த யுவராஜ் சிங், தனது 14 வது வயதில் தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். ஆனால் அவரது தந்தை அந்த பதக்கத்தை தூக்கி எறிந்து விட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும் படி கூறினார். இதனால் யுவராஜ் சிங்கின் தந்தையே அவரை தினமும் கிரிக்கெட் பயிற்சிக்கு அழைத்து செல்வார்.

யுவராஜ் சிங் இந்திய அணிக்காக U 19 உலக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர் இந்திய அணிக்காக முதல் முதலாக 2000 ஆவது ஆண்டில் அறிமுகமானார். அந்த வகையில் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையில் தான் யார் என்பதை நிரூபித்த் தருணங்களைகாண்போம்.

2000-ல் அறிமுகம்:

யுவராஜ் சிங் 2000 ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்காக அறிமுகமானார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில், யுவராஜ் சிங் தனது முத்திரையை பதித்தார், அந்த போட்டியில் அவர் 80 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார், இந்தியா 20 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த காலிறுதி போட்டியில் வெற்றி பெற்றது.

2002 நாட்வெஸ்ட் தொடர்:

லார்ட்ஸ் மைதானத்தில் 2002 நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா இங்கிலாந்தை சந்தித்தது. இங்கிலாந்துக்கு எதிராக 325 ரன்களை துரத்திய இந்திய அணியில் யுவராஜ் சிங் 63 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். அவர் அந்த இன்னிங்ஸ்சில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடிக்க, இந்தியா இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: Watch Video : சிங்கத்துக்கு இன்னும் வயசாகல...ரூத்ரதாண்டவம் ஆடும் ரகானே... மிஸ் பண்ணீட்டீங்களே CSK..

2007 டி20 உலகக் கோப்பை:

யுவராஜ் சிங், 2007 ஆம் ஆண்டு தொடக்க T20I உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வென்ற இந்திய அணியில் ஒரு அங்கமாக இருந்தார். இந்தியா கோப்பை வெல்ல யுவராஜ் சிங்கின் பங்களிப்புக்காக அவருக்கு தொடர்நாயகன் விருது வழங்கப்பட்டது. மேலும் அந்த தொடரில் இங்கிலாந்துடன் இந்தியா விளையாடியபோது ஸ்டூவர்ட் பிராட்டுக்கு எதிராக ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களை அடித்து அவர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். இதன் காரணமாக யுவராஜ் சிங்குக்கு சிக்சர் என்கிற பட்டமும் கிடைத்தது.

2011 உலகக்கோப்பை நாயகன்:

யுவராஜ் சிங் 2011 ODI உலகக் கோப்பையின் போது தனது மேட்ச்-வின்னிங் திறனையும் வெளிப்படுத்தினார். அந்த உலக்கோப்பையில் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக அத்தொடரின் தொடர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதில் ஆறு விக்கெட்டுகள் நாக் அவுட் கட்டத்தில் வந்தவை.

புற்றுநோயை வென்ற யுவராஜ்:

2011 இல் புற்றுநோயைக் கண்டறிந்த பிறகு, யுவராஜ் சிங் கீமோதெரபிக்கு உட்படுத்த வேண்டியிருந்தது, இது மைதானத்தில் அவரது உடல் திறனையும் பாதித்தது. இருப்பினும், அவர் 2017 இல் மீண்டும் எழுச்சி பெற்று இந்திய அணிக்கு திரும்பினார், அவர் கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிராக 150 ரன்கள் எடுத்தார்.