இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார். இளம் வீரர்களை பாராட்டி ஊக்குவிப்பது அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவது இப்படி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் யுவராஜ். அந்தவகையில் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மாவுக்கும் யுவராஜ் சிங் தான் வழிகாட்டி.

கொரோனா பரவல் காலத்திலிருந்து அபிஷேக் சர்மாவுக்கு துணையாக இருந்து பேட்டிங்கில் பயிற்சி அளித்து, அவரின் பேட்டிங்கை செம்மைப்படுத்தி, குடும்பத்தாரில் ஒருவராக யுவராஜ் இருந்து வருகிறார். கொரோனா பரவல் காலத்திலிருந்து அபிஷேக் சர்மாவுக்கு துணையாக இருந்து பேட்டிங்கில் பயிற்சி அளித்து, அவரின் பேட்டிங்கை செம்மைப்படுத்தி, குடும்பத்தாரில் ஒருவராக யுவராஜ் இருந்து வருகிறார்.

அபிஷேக் சர்மாவை வாழ்த்திய யுவராஜ் சிங்:

யுவராஜ் சிங் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் பஞ்சாப்பை சேர்ந்த வீரர்கள் தான்.

Happy birthday sir Abhishek 🙏🏻 🎂 hope you take as many singles this year as many as you knock out of the park 🤪 Keep putting in the hard work! loads of love and wishes for a great year ahead! ❤️ @IamAbhiSharma4 pic.twitter.com/Y56tQ2jGHk

— Yuvraj Singh (@YUVSTRONG12) September 4, 2024

அதிலும் குறிப்பாக இருவருமே இடது கை பேட்டர்கள். இதனால் ஆரம்பத்தில் இருந்தே அபிஷேக் சர்மாவிற்கு பல்வேறு விதமான கிரிக்கெட் உத்திகளை யுவராஜ் சிங் சொல்லிக்கொடுத்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று (செப்டம்பர் 4)பிறந்த நாள் கொண்டாடும் அபிஷேக் சர்மாவிற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபிஷேக். நீங்கள் மைதானத்தில் இருந்து வெளியேறும் எத்தனையோ சிங்கிள்களை இந்த ஆண்டு எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். கடின உழைப்பைத் தொடருங்கள்! வரவிருக்கும் ஒரு சிறந்த வருடத்திற்கு அன்பும் வாழ்த்துகளும்!"என்று கூறி வாழ்த்தியுள்ளார் யுவராஜ் சிங்.

மேலும் படிக்க: Rahul Dravid:பயிற்சியாளரா இல்லைன்னா என்ன.. ஆலோசனை வேணுமா இத பண்ணுங்க! டிராவிட் சொன்ன தகவல்

மேலும் படிக்க: Bajrang Punia:பாஜகவிற்கு எதிராக ஸ்கெட்ச்.. காங்கிரஸில் கைகோர்க்கும் பஜ்ரங் புனியா?