ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ள நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்:

டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை போலவே டெஸ்ட் போட்டிக்கு என்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் டெஸ்ட் தரவரிசையில் டாப் 10 இடங்களில் உள்ள அணிகள் மோதும், இதில் புள்ளிப்பட்டியல் மற்றும் வெற்றி சதவீகிதத்தின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும். இது வரை இரண்டு முறை நடந்துள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.

இறுதிப்போட்டி:

லார்ட்ஸில் தென்னாப்பிரிக்காவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு முன்னதாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசுத் தொகையை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. WTC 2023–25 இறுதிப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை இப்போது 5.76 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (தற்போது 49,31,36,640 இந்திய ரூபாய்), இது முந்தைய இரண்டு இறுதிப்போட்டிகளில் வழங்கப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு அதிகம்.

வெற்றி பெறும் அணிக்கு 3.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ. 30.78 கோடி) கிடைக்கும், இது 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 2.16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ. 18.46 கோடி) கிடைக்கும் - இது முந்தைய (2021-23) ஆண்டுகளை ஓப்பிடும் போது 800,000 அமெரிக்க டாலர்கள் அதிகமாக உள்ளது.

It's exciting to announce that the winner of the #WTC25 Final between South Africa and Australia will earn $3.6M, with the runner-up to receive $2.1M. The increase in prize money exhibits our efforts to prioritize Test cricket and build on momentum from previous WTC cycles. @ICC pic.twitter.com/GMgWxM7GSb

— Jay Shah (@JayShah) May 15, 2025

ஜூன் 11–15 வரை லார்ட்ஸில் நடைபெறும் WTC இறுதிப் போட்டி

தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி ஜூன் 11 முதல் ஜூன் 15 வரை லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். போட்டிக்கான உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில், தென்னாப்பிரிக்காவின் டெம்பா பவுமா, ககிசோ ரபாடா மற்றும் ஐடன் மார்க்ராம், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இடம்பெறும் சிறப்பு விளம்பர வீடியோவை ஐசிசி வெளியிட்டது.

A battle of wills, minds and hearts in the Ultimate Test 👊

The #WTC25 Final at Lord's is upon us 🏟 pic.twitter.com/JsNXpmgOXD

— ICC (@ICC) May 15, 2025

இறுதிப் போட்டி பயணம்:

பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு எதிரான தொடர் வெற்றிகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான தொடர் சமநிலையில் முடிந்த பிறகு, தென்னாப்பிரிக்கா WTC தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியாவை 3-1 என்ற கணக்கில் வென்றதன் மூலமும், சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 3-0 என்ற தொடரில் வென்றதன் மூலமும், நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிராக கூடுதல் வெற்றிகளைப் பெற்றதன் மூலமும் ஆஸ்திரேலியா வலுவான பிரச்சாரத்திற்குப் பிறகு தகுதி பெற்றது.

பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியாவை 3-1 என்ற கணக்கில் வென்றதன் மூலமும், சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 3-0 என்ற தொடரில் வென்றதன் மூலமும், நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிராக கூடுதல் வெற்றிகளைப் பெற்றதன் மூலமும் ஆஸ்திரேலியா வலுவான பிரச்சாரத்திற்குப் பிறகு தகுதி பெற்றது.