WPL 2026: ஆர்சிபி-யின் அதிரடி ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது!

2 months ago 8
ARTICLE AD

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, பிசிஏ மைதானத்தில்  நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக்  தொடரின் 12வது போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் (ஜிஜி) அணியை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த சீசனில் தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியாக மாறியுள்ளது.

ஆர்சிபி 178 ரன்கள்

இந்த போட்டியில் டாஸ்சில் வெற்றி பெற்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த  ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. இதில்  9 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி அணி தடுமாறியது.

அங்கிருந்து கேப்டன் ஸ்மிருதி மந்தனா, கௌதமி நாயக்கருடன் இணைந்து 45 பந்துகளில் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தன் மூலம் அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். மந்தனா 23 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு கௌதமி, ரிச்சா கோஷுடன் இணைந்து 69 ரன்கள் சேர்த்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றனர்.

கௌதமி நாயக் 55 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், அதே சமயம் கோஷ் 27 ரன்கள் எடுத்தார்.

குஜராத் அணி சார்பில் காஷ்வி கௌதம் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர், அதே சமயம் ரேணுகா தாக்கூர் மற்றும் சோஃபி டிவைன் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

சரணடைந்த குஜராத்

நல்ல இலக்கை துரத்திய  குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த அணி 5 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அங்கிருந்து அனுஷ்கா சர்மா, கேப்டன் ஆஷ்லே கார்ட்னருடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 29 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்க முயன்றார், ஆனால் அனுஷ்கா சர்மா (18) ஆட்டமிழந்ததும் அணி மீண்டும் பெங்களூரு பக்கம் சென்றது.

ஜெயண்ட்ஸ் அணி 56 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. அங்கிருந்து பாரதி புல்மாலி, கார்ட்னருடன் இணைந்து 24 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார். கார்ட்னர் 43 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், பாரதி 14 ரன்கள் எடுத்து நடையைக்கட்டினார், இவர்கள் போராடினாலும் ஜெயண்ட்ஸ் அணி மோசமான தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

முதல் அணியாக பிளே ஆஃப் சென்ற ஆர்சிபி

ஆர்சிபி அணி சார்பில் சாயிலி சத்கரே அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்,  நாடின் டி கிளார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும், லாரன் பெல், ராதா யாதவ் மற்றும் ஸ்ரேயங்கா பாட்டீல் தலா 1 விக்கெட் எடுத்தனர்.இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த்து.

Read Entire Article