WPL 2026: RCB-க்கு ஆப்பு வைத்த டெல்லி கேபிடல்ஸ்.. பிளேஆஃப் கனவை தக்க வைத்த ஜெமிமா படை

2 months ago 9
ARTICLE AD

மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2026 தொடரில் தோல்வியே சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி, டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது. வதோதராவில் நடைபெற்ற விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியதோடு, இந்த சீசனில் ஆர்சிபியைத் தோற்கடித்த முதல் அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

சுருண்ட ஆர்சிபி அணி:

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, டெல்லி பந்துவீச்சாளர்களின் நல்ல பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 38 ரன்கள் சேர்த்தார். மற்ற நட்சத்திர வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், ஆர்சிபி அணி வெறும் 109 ரன்களுக்குச் சுருண்டது. டெல்லி தரப்பில் சினே ராணாவைத் தவிர மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.

டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி

எளிய இலக்கை நோக்கிப் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு லாரா வோல்வார்ட் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவருக்குப் பக்கபலமாக கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 ரன்களும், மேரிஜென் கப் 19 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இதன் மூலம் 26 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே டெல்லி அணி இலக்கை எட்டிப் பிடித்தது.

Roaring into the Top 2⃣ 💙@DelhiCapitals with a dominant 7⃣-wicket win in Vadodara to jump to 2nd spot on the points table 👏

Scorecard ▶️ https://t.co/LX37VtsnbS #TATAWPL | #KhelEmotionKa | #RCBvDC pic.twitter.com/vSKMsOAqdk
— Women's Premier League (WPL) (@wplt20) January 24, 2026

சூடுபிடித்துள்ள பிளேஆஃப் ரேஸ்

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த டெல்லி கேப்பிடல்ஸ், நேரடியாக இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி ஏற்கனவே பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில், மீதமுள்ள இரண்டு இடங்களுக்காக டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய நான்கு அணிகளுக்கு இடையே தற்பொழுது கடும் போட்டி நிலவுகிறது. அனைத்து அணிகளுக்கும் இன்னும் தலா இரண்டு போட்டிகள் மீதமுள்ளதால், பிளேஆஃப் ரேஸ் தற்பொழுது சூடுபிடித்துள்ளது.

Read Entire Article