வாட்ஸப்பில் விரைவில் UPI பேமெண்ட் சேவைகளுடன் ப்ரீபெய்டு மொபைல் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்துவது ஆகிய வசதிகளை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்டா வாட்ஸ் அப்:

வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் வாங்கிய பிறகு, இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயனாளர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. பயனர்களின் வசதிக்கு எற்ப, தொழில்நுட்ப வசதிகளை மேம்பத்தும் நோக்கில் மெட்டா பல அப்டேட்டை வழங்கி வருகிறது. தொழில்நுப்ட வசதிகளை அவ்வபோது வழங்கி வருகிறது. புதிய அப்டேட்களை உருவாக்கும் பணியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதோடு, ஃபேஸ்புக்கில் உள்ள வசதிகளை முதலில் இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்தது. இப்போது வாட்ஸப் செயலியிலும் இரண்டிலும் உள்ள அப்டேட்கள் கிடைக்கின்றனர். அதொடு, வாட்ஸ் அப்பில் யு.பி.ஐ. பேமெண்ட் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

‘Accounts Center’:

ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் இரண்டிலும் ஸ்டோரி அல்லது போஸ்ட் பதிவிட்டால் அதை இரண்டு சமூக வலைதளத்திலும் ஒரே நேரத்தில் பகிரும் வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ‘Accounts Center' உங்க அக்கவுண்ட் மெட்டா குறிப்பிட்ட சென்டரில் இணைக்கப்பட வேண்டும். இப்போது வாட்ஸ் அப் அக்கவுண்ட்டையும் அக்கவுண்ட் சென்டருடன் இணைந்துவிட்டால் ஒரே நேரத்தில் வாட்ஸ் அப் ஸ்டேடஸ் உங்களின் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் கணக்குகளிலும் அப்லோடு ஆகிவிடும். இதற்கு நீங்கள் உங்களுடைய இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக் அக்கவுண்டை வாட்ஸ் அப் உடன் இணைக்க வேண்டும்.

மின்சார கட்டணம் செலுத்தும் வசதி:

WhatsApp beta ஆண்ட்ராய்டு version 2.25.3.15-ல் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்லதாக தகவல் கிடைத்துள்ளது. பயனர்களின் வசதிக்கேற்ப நிதி மேலாண்மை தொடர்பான சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மின்சார கட்டணம், மொபைல் ரீசார்ஜ், வீட்டு வாடகை செலுத்துவது ஆகிய வசதிகளை வாட்ஸப்பில் விரைவில் வெளிவர உள்ளது. இதற்கான வேலைகளை மெட்டா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 2020-ல் யு.பி.ஐ. சேவையை அறிமுகம் செய்தது. இதன்மூலம் தனிநபர் கான்டெக்ட்டில் உள்ள நபர்களுக்கு டிஜிட்டல் பர்வர்த்தணைகளை மேற்கொள்ள முடியும்.

வாட்ஸ் அப்பில் கட்டணங்களை செலுத்தும் வசதி எப்போது அறிமுகம் ஆகும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இந்த வசதி வந்துவிட்டால் கட்டணங்களை செலுத்துவது, ரீசார்ஜ் செய்வது உள்ளிட்டவற்றை வாட்ஸ் அப் மூலம் செய்துவிடாலாம். இது கூகுள் பே, ஃபோன் பே ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க..

Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து

IND vs ENG: ஷாக்! பாதியிலே நிறுத்தப்பட்ட இந்தியா - இங்கிலாந்து போட்டி - என்ன காரணம்?