சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4:

உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4. கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியின், இறுதி போட்டி மிக பிரம்மாண்டமாக நேற்று ஞாயிறு 4:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. ஃபைனல் போட்டியாளர்கள்:

இந்த போட்டியில், ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, திவினேஷ், அபினேஷ் மற்றும் மஹதி என மொத்தம் 6 போட்டியாளர்கள் இறுதி சுற்றில் மோத உள்ளனர். சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இறுதி போட்டி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.இந்த நிலையில் தற்போது, சரிகமப கிராண்ட் பைனல் நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

டைட்டிலை வென்ற திவினேஷ்

சரிகமப 4 ஆவது சீசன் தொடங்கியது முதல் ஏராளமானவர்களின் ஆதரவைப் பெற்றவர் போட்டியாளர் திவினேஷ். எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்த திவினேஷ் எந்த வித இசை பயிற்சியும் இல்லாமல் தனது தாத்தாவிடம் இருந்து பழைய எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல்களின் மீது ஈர்ப்பு கொண்டார். கிளாசிக் பாடல்களை பாடியே மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்த திவினேஷ் சரிகமப 4 ஆவது சீசனில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

திவினேஷ் சிவகார்த்திகேயன் பாடிய 'நான் ஆணையிட்டாள்"

பரிசு வென்ற திவினேஷை நடிகர் சிவகார்த்திகேயன் தூக்கி முத்தமிட்டார். இதனைப் பார்த்த திவினேஷின் பெற்றோர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்கள். இதனைத் தொடர்ந்து திவினேஷூடன் இணைந்து சிவகார்த்திகேயன் எம்.ஜி.ஆரின் நான் ஆணையிட்டாள் பாடலை பாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

SK 💥🔥

pic.twitter.com/eAFGFafZ3W

— Christopher Kanagaraj (@Chrissuccess) May 12, 2025