கங்குவா

சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மும்பை , டெல்லி என ப்ரோமோஷனுக்காக கடந்த இரண்டு நாட்கள் சூர்யா பிஸியாக இருந்து வருகிறார். இன்று அக்டோபர் 24 ஆம் தேதி தெலுங்கு ப்ரோமோஷனுக்காக ஹைதராபாத் சென்றார். சூர்யாவிற்கு தமிழைப் போல ஒரு பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. கெளதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம். தெலுங்கு ரசிகர்களிடம் பெரியளவில் தாக்கம் ஏற்படுத்திய படம். தெலுங்கில் இப்படம் சூர்யா சன் ஆஃப் சத்யமூர்த்தி என்று வெளியானது.

கண் கலங்கிய சூர்யா

நிகழ்ச்சிக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்த நடிகர் சூர்யா பேசும்போட்டு உணர்ச்சிவசப்பட்டார். " தியேட்டர்ல என்னோட படம் ரிலீஸாகி 2 வருஷத்துக்கும ஆகிடுச்சு. ஆனாலும் சூர்யா சன் ஆஃப் சத்யமூர்த்தி படம் ரீரிலீஸ் ஆனபோது நீங்க எல்லாரும் இதே இடத்துல இருந்தீங்க. உங்க அன்ப பார்த்து என் கண்ணுல கண்ணீர் வந்திருச்சு..இவ்ளோ அன்புக்கு நன்றி. எல்லாத்துக்கும் நன்றி. இத நான் ஒரு ரத்த சொந்தமாக தான் பாக்குறேன். அதனால தான் உங்களுக்கு ஒரு சிறப்பான அனுபவத்தைக் கொடுக்க வேண்டியது என்னோட பொறுப்பு. அதனால் தான் கங்குவா." என ரோலக்ஸ் ஸ்டைலில் கெத்தாக பேசியுள்ளார் .இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

#Suriya turns Emotional at #Kanguva Hyderabad Meet and thanks all the fans!! pic.twitter.com/RutCU4PLLu

— AndhraBoxOffice.Com (@AndhraBoxOffice) October 24, 2024