Vishal Dhansika: 15 வருஷ ட்ராவல்.. விஷாலுக்கும், தன்ஷிகாவிற்கும் காதல் மலர்ந்தது எப்படி?

7 months ago 5
ARTICLE AD

தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக உலா வருபவர் விஷால். இவரை பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுத்த நிலையில், இவருக்கும் நடிகை சாய் தன்ஷிகாவிற்கும் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி  திருமணம் நடைபெற உள்ளது. இதை நடிகை சாய் தன்ஷிகாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

காதல் வந்தது எப்படி?

சாய் தன்ஷிகாவிற்கும், நடிகர் விஷாலுக்கும் காதல் உருவானது எப்படி என்பதை கீழே காணலாம். நடிகை தன்ஷிகா நேற்று யோகி டா இசை வெளியீட்டு விழாவில் இதை மனம்திறந்து பேசினார். அதில் அவர் கூறியதாவது, இந்த மேடையை அறிவிப்பு மேடையாக நாங்க நினைக்கவில்லை. காலையில் தந்தியில் ஒரு செய்தி வந்தவுடன், நான் முன்னாடியே சொல்லிட்டேன். நீங்க என் ஃப்ரண்ட், நான் உங்க ஃப்ரண்ட் 15 வருஷம் ஃப்ரண்ட். அப்படியே மெயின்டெயின் பண்ணிக்கலாம்.

குரல் கொடுத்தவர்:

15 வருஷமா ட்ராவல் ஆகிருக்கோம். நானும், விஷாலும். இதுக்கு அப்புறம் மறைக்க ஒன்னும் இல்ல. என்ன பேபி சொல்லிறலாமா? ஆகஸ்ட் 29ம் தேதி கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம். எனக்கு 15 வருஷமா விஷாலைத் தெரியும். என்னை எங்க பாத்தாலும் மரியாதையா இருப்பாரு. எனக்கு ஒரு விஷயம் நடக்கும்போது எப்பவும் குரல் கொடுத்துருக்காரு. எனக்கு தெரிஞ்சு எந்த ஹீரோவும் வீட்டுக்கு வந்தது இல்ல.

Official Actor #Vishal is going to marry #SaiDhanshika on August 29, 2025 💍♥️
pic.twitter.com/ePWoIljAuA
— Sugumar Srinivasan (@Sugumar_Tweetz) May 19, 2025

எனக்கு ஒரு பிரச்சினைனு வந்தப்ப என் வீட்டுக்கு வந்தாரு. ரொம்ப இனிமையானவரு. அவரோட அணுகுமுறையே எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. சமீபகாலமாகத்தான் பேச ஆரம்பிச்சோம். எங்களுக்குள் ஏற்பட்டுருச்சு. எனக்கும் தோணுச்சு, அவருக்கும் தோணுச்சு. ரெண்டு பேரும் ஒத்துக்கிட்டோம். இது கல்யாணத்துக்குத்தான் போகப்போதுனு தெரிஞ்சுகிட்டோம். அப்புறம் ஏன் காத்திருக்கனும்?

ஒரு விஷயம்தான் நான் உங்களோட மகிழ்ச்சியா இருக்கனும். நான் உங்களை காதலிக்கிறேன். நல்ல மனிதர். நல்லா இருக்கனும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேடையில் தன்ஷிகா விஷாலை பேபி  என்று அழைத்தபோதும், அவரைப் பற்றி பேசியபோதும் நடிகர் விஷால் வெட்கப்பட்டார். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

வெற்றிப்படங்கள்:

செல்லமே படம் மூலமாக நடிகராக அறிமுகமான விஷால் திமிரு, சண்டைக்கோழி, தாமிரபரணி, அவன் இவன், பாண்டிய நாடு, துப்பறிவாளன் என பல வெற்றிப்படங்களை தந்துள்ளார். தமிழில் பேராண்மை மூலம் அறிமுகமான சாய் தன்ஷிகா அரவான், பரதேசி, ரஜினிகாந்தின் கபாலி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர்கள் இருவரது திருமணமும் நடிகர் சங்க கட்டிடத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஷால் - தன்ஷிகாவிற்கு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகின் பல பிரபலமான முன்னணி நடிகைககளை விஷால் காதலிப்பதாக தொடர்ந்து வதந்திகள் வந்த நிலையில், தற்போது அவருக்கும் நடிகை தன்ஷிகாவிற்கும் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Read Entire Article