இந்திய கிரிக்கெட் அணியின் அடையாளமாக திகழ்பவர் விராட் கோலி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக பல அரிய சாதனைகளை படைத்துள்ளார்.

கோலி டெஸ்ட் ஓய்வு:

கடந்த டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, கடந்த வாரம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். அவரது அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ரசிகர்கள் தந்த ஃபேர்வெல்:

இந்த சூழலில், இந்தியா பாகிஸ்தான் மோதல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி மீண்டும் நேற்று தொடங்கியது. இந்திய அணிக்காக மாபெரும் சாதனைகளை படைத்த விராட் கோலிக்கு முறையான டெஸ்ட் வழியனுப்பு விழா போட்டி இல்லை என்று ரசிகர்கள் ஆதங்கம் அடைந்திருந்தனர். இதனால், விராட் கோலிக்கு ஃபேர்வல் மற்றும் நன்றி சொல்லும் விதமாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கோலியின் வெள்ளை நிற ஜெர்சி அணிந்து போட்டியை காண வருமாறு ரசிகர்கள் சக ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

#18. 🥹👑 pic.twitter.com/8fqGfyVKVt

— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 17, 2025

இதையடுத்து, சின்னசாமி மைதானத்தில் விராட் கோலியின் வெள்ளை நிற டெஸ்ட் சீருடையில் மைதானம் முழுவதும் ரசிகர்கள் திரண்டனர். மழை காரணமாக போட்டி ரத்தானாலும் மைதானம் முழுவதும் வந்திருந்த ரசிகர்களில் பெரும்பாலோனார் வெள்ளை நிற விராட் கோலியின் சீருடையிலே பங்கேற்றனர். இது கோலியின் மீது ரசிகர்கள் கொண்ட பேரன்பை வெளிப்படுத்தியது.

வெள்ளை நிற பறவைகள்:

மேலும், நேற்று வானில் வெள்ளை நிறத்தில் பறவைகள் கூட்டம் ஒன்று மைதானத்தின் மேலே உலா வந்த வீடியோவையும் ரசிகர்கள் பகிர்ந்து இயற்கையும் கோலியை வாழ்த்துவதாக நெகிழ்ச்சியுடன் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். ஏனென்றால், இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்றுத் தந்த கேப்டன் விராட் கோலி ஆவார்.

பிசிசிஐக்கு அடி:

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை நம்பர் 1 அணியாக உலா வரச் செய்த விராட் கோலி, ஓய்வு அறிவித்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆட விருப்பம் தெரிவித்ததாக அவரது ரஞ்சி பயிற்சியாளர் கூறியது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. மேலும், விராட் கோலியின் ஓய்வுக்கு கவுதம் கம்பீர் மற்றும் அகர்கர் இருவருமே காரணம் என்றும் தகவல்கள் வெளியானது. ரசிகர்கள் தந்த இந்த ஃபேர்வெல் பிசிசிஐக்கு மிகப்பெரிய அடியாக கருதப்படுகிறது.

இதனால், பிசிசிஐ விராட் கோலிக்கு தராத முறையான வழியனுப்பு விழாவை தாங்கள் தருகிறோம் என்று நேற்று மைதானத்தில் விராட் கோலி மற்றும் ஆர்சிபி ரசிகர்கள் வெள்ளை நிற சீருடையில் அளித்திருந்தனர். ரசிகர்கள் வெள்ளை நிற சீருடையில் பங்கேற்ற புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.