Vinfast Electric Scooter in India: இந்தியாவின் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் கால்தடம் பதிக்க ஆர்வம் காட்டி வரும் நிறுவனம் வின்ஃபாஸ்ட். இந்த நிறுவனத்தில் VF6 மின்சார கார்கள் தற்போது இந்திய சந்தையில் விற்பனையாகி வருகிறது. கார்களைப் போலவே மின்சார ஸ்கூட்டர்கள் தயாரிக்கவும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.

3 புதிய மின்சார ஸ்கூட்டர்கள்:

3 புதிய மின்சார ஸ்கூட்டர்களை வின்ஃபாஸ்ட் இந்தியாவில் தயாரித்து அறிமுகப்படுத்த உள்ளது. Evo, Feliz II மற்றும் Viper ஆகிய 3 மின்சார ஸ்கூட்டர்களே இந்த புதிய இ ஸ்கூட்டர்கள் ஆகும். இந்த மின்சார ஸ்கூட்டர்கள் அனைத்திலும் லித்தியம் பேட்டரி பொருத்தப்பட உள்ளது.

பேட்டரி ஆற்றல்:

இந்த Evo இ ஸ்கூட்டர் 12 இன்ச் சக்கரங்கள் கொண்டதாக உருவாக்கப்பட உள்ளது. இதில் 2.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்படுகிறது. இதில் அதிகபட்சமாக 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 110 கிலோ எடை கொண்டதாக இந்த இ ஸ்கூட்டர் உருவாக்கப்பட உள்ளது. 770 மி.மீட்டர் இருக்கை உயரம் அமைக்கப்பட உள்ளது. TVS iQube, Bajaj Chetak மற்றும் Ather Rizta ஆகிய இ ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட உள்ளது.

அதேசமயம், மற்ற 2 மாடல்களான Feliz II மற்றும் Viper ஆகிய இ ஸ்கூட்டர்கள் 14 இன்ச் சக்கரங்கள் கொண்டதாக உருவாக்கப்பட உள்ளது. Feliz II இ ஸ்கூட்டரில் 3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட உள்ளது. Viper இ ஸ்கூட்டர் 4.8 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டதாக உருவாக்கப்பட உள்ளது.

சவால்:

இந்த வின்ஃபாஸ்ட் இ ஸ்கூட்டர்கள் விரைவில் தயாரிக்கப்பட உள்ளது. இதன் தயாரிப்பு பணிகள் தற்போது தொடக்க கட்டத்தில் உள்ளது. இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்கள் தயாரிப்பும், விற்பனையும் அதிகரித்து வரும் நிலையில் முன்னணி நிறுவனங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட போட்டியிட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஓலா, ஏதர் நிறுவனங்கள் சவால் அளித்து வருகிறது. இந்த வாகனங்களில் 35 லிட்டர் டிக்கி வசதி கொண்டது.

வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலை தூத்துக்குடியில் உள்ளது. இதே தொழிற்சாலையில் அவர்களது மின்சார கார்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதே தொழிற்சாலையில் மின்சார ஸ்கூட்டர்களும் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வளவு மைலேஜ்?

Feliz II மற்றும் Viper ஆகிய மின்சார ஸ்கூட்டர்களும் எவ்வளவு மைலேஜ் தரும்? என்ற தகவல் வெளியாகவில்லை. நல்ல மைலேஜ் மற்றும் அதிக வேகத்தில் செல்லும் வகையில் இது தயாரிக்கப்படும் என்று கருதப்படுகிறது. வின்ஃபாஸ்ட் தயாரிக்க உள்ள இந்த 3 புதிய மின்சார ஸ்கூட்டர்களின் விலை குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. விரைவில் அந்த தகவலும் வெளியாகும் என்று கருதப்படுகிறது.

தோற்றம், வடிவமைப்பு, நெருக்கடியான போக்குவரத்திலும் எளிதாக செல்லும் வகையில் இந்த இ ஸ்கூட்டர்களை வடிவமைக்க வின்ஃபாஸ்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.