தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஏராளமான புதியவர்கள் வருகை தந்து வருகிறார்கள். அப்படி என்ட்ரி கொடுத்த பலரும் பல நல்ல படைப்புகள் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கிறார்கள். அதில் ஒருவர் தான் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன். 2023ஆம் ஆண்டு வெளியான 'குட் நைட்' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விநாயக் சந்திரசேகரன்(Vinayak Chandrasekran).

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த 'குட் நைட்' படத்தில் 'ஜெய் பீம்' மணிகண்டன், மீதா ரகுநாத், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், பக்ஸ், ரேச்சல் ரெபேக்கா, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஐடி இளைஞரின் குறட்டை பிரச்சனையால் அவரது வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல்களை மையமாக வைத்து வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இயக்குநர் விநாயக் சந்திரசேகரனுக்கும் பிரியா என்ற மணப்பெண்ணுக்கும் இன்று சென்னையில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. விநாயக் சந்திரசேகரனின் திருமணப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.