Vikravandi By Election: எங்களுக்கு நம்பிக்கையில்லை.. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த தேமுதிக!

1 year ago 6
ARTICLE AD
<p>விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், &ldquo;தேர்தல் என்ற ஜனநாயகம் இன்றைய ஆட்சியாளர்களின் கையில் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஆட்சியாளர்களின் அதிகாரத்தில் தேர்தல் தவறாக நடத்தப்படுகிறது. இடைத்தேர்தல் மீது நம்பிக்கை இல்லாததால் தொண்டர்களின் உழைப்பு, நேரம், பணம் உள்ளிட்டவற்றை வீணாக்க விரும்பவில்லை&rdquo; என தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p>ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னதாக இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக தெரிவித்திருந்தது. தற்போது அதன் கூட்டணி கட்சியான தேமுதிகவும் தெரிவித்திருக்கிறது. எனவே விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக, பாமக (பாஜக கூட்டணி), நாம் தமிழர் கட்சி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில் 3 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
Read Entire Article