Vijay TV Serial: சோலி முடிஞ்சிது... TRP-யில் முட்டி மோதியும் தேறாத 3 சீரியலை அடுத்தடுத்து தூக்கி அடித்த விஜய் டிவி!

6 months ago 5
ARTICLE AD

திரைப்படங்களை விட சமீப காலமாக, முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். முன்பெல்லாம் இல்ல தரசிகள் மட்டுமே சீரியல்களை பார்த்து வந்த நிலையில், சமீப காலமாக... இளைஞர்களும் சீரியல் பார்க்க துவங்கி விட்டனர். எனவே அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் விதத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் சீரியல்கள் எடுக்கப்படுகிறது.

சீரியல்களை ஒளிபரப்புவதில், சன் டிவி, ஜீ தமிழ், மற்றும் விஜய் டிவி தொலைக்காட்சிகள் தான் முன்னணியில் உள்ளது. இந்த மூன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு இடையே தான் TRP ரேட்டிங்கில் போட்டியும் நிலவுகிறது. TRP ரேட்டிங்கில் மிகவும் குறைவாக வரவேற்பை பெரும் சீரியலைகளை புதிய சீரியலுக்காக திடீர் என முடிக்கு கொண்டுவருவதும் வழக்கமான ஒன்று தான்.

அந்த வகையில் தற்போது அடுத்தடுத்து 3 விஜய் டிவி சீரியல்கள் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் தாப்ரோது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, மகாநதி, அய்யனார் துணை, சிறகடிக்கும் ஆசை, சின்ன மருமகள் உள்ளிட்ட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் விஜய் டிவியில் எதிர்பாராத திருப்பு முனையுடன், குடும்ப செண்டிமெண்ட் கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் ஆஹா கல்யாணம், சக்திவேல் மற்றும் பொன்னி.

ஆரம்பத்தில் இந்த 3 சீரியல்களை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீப காலமாக TRP ரேட்டிங்கில் மிகவும் டல் அடிக்க துவங்கியது. எனவே அதிரடியாக இந்த 3 சீரியல்களையும் முடித்து விட்டு, புது சீரியலை உள்ளே இறக்க விஜய் டிவி தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. TRP ரேட்டிங்கில் இந்த சீரியல்கள் பின் தங்கி இருந்தாலும்... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஆனால் ஆதிரடியாக இந்த இரு சீரியல்களை முடிவுக்கு வர உள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article