ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் (The Indian Premier League (IPL)) இளம் வீரரான விக்னேஷ் புத்தூர், அவரது அறிமுகம் போட்டியிலேயே சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானி ட்ரெஸிங் ரூமில் அவருக்கு பேட்ஜ் கொடுத்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் 2025:

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் தொடங்கியுள்ளது. இதில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் சென்னை - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 156 ரன்கள் இலக்கை சென்னை எளிதாக ஸேஸ் செய்துவிடும் என்ற நினைப்பு இருந்தபோது, மும்பை அணியினர் விக்கெட்களை எடுத்தனர். சென்னை அணி 6 விக்கெட்களை இழந்தது. சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் ஜெய்க்வாட் விக்கெட்டை எடுத்த விக்னேஷ் புதூர் பற்றி சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வருகிறது. சிவம் துபே, தீபக் ஹீடா ஆகியோரின் விக்கெட்டையும் இவர் எடுத்தார். 4 ஓவட்களில் 32 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். இவர் விளையாடிய முதல் போட்டியிலேயே மூன்று விக்கெட்டுகளை எடுத்த திறமையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

எம்.எஸ். தோனி - விக்னேஷ் புதூர் - மறக்க முடியாத போட்டி:

இவர் லெஃப் ஆர்ம் ஸ்பின்னர். கேரள கிரிக்கெட் லீக், தமிழ்நாடு ப்ரீமியர் லீக் விளையாடியுள்ள விக்னேஷ் புதூரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. இளம் வயதில் மிகப் பிரபலமான அணியில் விளையாட கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திகொண்டார் அவர். ஆட்டோ ஓட்டுநரின் மகன் மும்பை இந்தியனஸ் அணியிம் சிறந்த வீரராகவும் ஐ.பி.எல்.-ல் எமர்ஜிங் ப்ளேயராகவும் இருக்கிறார். இந்தத் தொடரில் இவரின் அதிரடியான தருணங்களை காணும் ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதோடு, அறிமுக போட்டியிலேயே விக்னேஷ் புதூரை கிரிக்கெட்டின் க்ளாசிக் வீரர் எம்.எஸ். தோனி பாராட்டியது, அவரை தட்டிக் கொடுத்து உரையாடிய வீடியோ வீடியோ இணையதளத்தில் வைரலானது.

Young Vignesh Puthur ne MI ke liye 3 zabardast wickets liye-kya baat hai, dil ko choo gaya! MS dhoni bhi Young boy Vignesh Puthur ko sarahna karte hue dekh atyant prasanta ho rahi hai. Ye pal dil ko chhu rahi hai.❤️#MSDhoni #Thala #CSKvsMI #VigneshPuthur pic.twitter.com/lkw1deBQ9S

— I Love my India 🇮🇳❤️ (@teenagers50) March 23, 2025

நீதா அம்பானி பாராட்டு:

விக்னேஷ் புதூரை நீதா அம்பானி பாராட்டி, பேட்ஜ் கொடுத்தா வீடியோ வைரல் ஆகி வருகிறது. மும்பை இந்தியன்ஸின் சிறந்த பந்துவீச்சாளர் விருதை வழங்கினார். அணியினரும் விக்னேஷின் வெற்றியை கொண்டாடினர். விக்னேஷ் புதூர் பேசுகையில், “ மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக, கிரிக்கெட் விளையாடுவேன் என நினைத்தும் பார்த்ததில்லை. மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் வென்றிருக்க வேண்டிய போட்டி. கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு நன்றி. அவர் உறுதுணையாக இருந்ததால்தான் எந்தவித பதற்றமும் இன்றி விளையாட முடிந்தது. என்னை ஊக்குவிக்கும் அணி வீரர்களுக்கு நன்றி.” என்று தெரிவித்தார்.

அதோடு, விக்னேஷ் புதூர், கேப்டனுக்கு நன்றி அவரால்தான்.. என்று பேசியபோது.. சூர்யகுமார் யாதவ் “ போதும் போதும் தம்பி...” என்பது போல ரியாக்ட் செய்தார். நீதா அம்பானியின் காலின் விழுந்து ஆசிர்வாதமும் பெற்றுகொண்டார் விக்னேஷ்.