Video: ஆச்சர்யமளிக்கும் வீடியோ! ஐரோப்பிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய நம்ம ராக்கெட்.!

1 year ago 7
ARTICLE AD

இந்தியாவின் PSLV-C59 ராக்கெட் ,ஐரோப்பிய விண்வெளி மையத்தின் இரண்டு செயற்கைக்கோள்களுடன் விண்ணில் நிலை நிறுத்திய வீடியோ காட்சியானது வெளியாகியுள்ளது.

விண்ணில் பாயந்த பி.எஸ்.எல்.வி ராக்கெட்:

கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி மாலை  ஐரோப்பிய விண்வெளி மையத்திற்குச் சொந்தமான இரண்டு செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக  விண்ணில் பாய்ந்தது, PSLV-C59 ராக்கெட். இந்த ராக்கெட்டானது, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளமான சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, ராக்கெட் ஏவப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவின் விண்வெளி மையமான இஸ்ரோ, வணிக ரீதியாக, ஐரோப்பிய செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது.

வீடியோ:

இந்த தருணத்தில், ஆச்சர்யமிக்க வீடியோ ஒன்றை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், பிஎஸ்.எல்.வி ராக்கெட் சுமந்து கொண்டு சென்று விண்ணில் செலுத்தும் காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அதில் 4 அடுக்குகளை கொண்டு PSLV ராக்கெட்டை,  ஒவ்வொன்றாக பிரிந்து செல்லும் காட்சியை பார்க்க முடிகிறது.

PSLV-C59/Proba-3 Mission - Liftoff, PSOM Separation, Stage Ignition & Satellite Separation Video pic.twitter.com/oxaJrMmObi
— ISRO (@isro) December 7, 2024

இதைதொடர்ந்து, கடைசி கட்டமாக 4வத் கட்டத்தில் உள்ள செயற்கைக்கோள்களை விண்ணில் பிரித்து விடும் காட்சியையும் பார்க்க முடிகிறது.

இந்த காட்சியை , இஸ்ரோ தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள நிலையில், பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்து, பகிர்ந்து வருகின்றனர்.

ஐரோப்பிய செயற்கைக்கோள்கள்:

ஐரோப்பிய விண்வெளி மையத்தின் புரோபா-3  விண்கலமானது, 2 விண்கலங்களைக் கொண்டுள்ளது. கரோனாகிராஃப் ஸ்பேஸ் கிராப்ட்  மற்றும் ஓகல்டர் ஸ்பேஸ் கிராஃப்ட்  ஆகிய இரண்டு விண்கலங்களும் ஒன்றாக அடுக்கப்பட்ட கட்டமைப்பில் ஏவப்பட்டது.

இந்நிலையில், ராக்கெட் ஏவப்பட்ட 18வது நிமிடத்தில், ப்ரோபா விண்கலன்களானது வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள்களானது, நீள்வட்டப்பாதையில் பூமியை சுற்றி வருவதை பார்க்க முடிகிறது.

பூமியிலிருந்து குறைந்தபட்சமாக சுமார் 600 கி.மீ தொலைவிலும், அதிகபட்சமாக 60,530 கி.மீ தொலைவிலும் சுற்றி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள்களின் பணிகள்:

புரோபா-3 விண்கலத்தின் முக்கிய பணியானது, செயற்கையாக சூரிய கிரகணத்தை சூரியனின் வளிமண்டலம் குறித்து ஆராய்ச்சி செய்வதாகவும். இதன் மூலம் சூரிய வளிமண்டலத்தில் மிக அதிக வெப்பம் ஏன் இருக்கிறது என்பது குறித்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சூரிய புயல்கள் குறித்தும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். இந்த திட்டமானது ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மிக முக்கிய திட்டமாக பார்க்கப்படுகிறது.

Also Read: WhatsApp: உங்களுக்கு தெரியுமா? வாட்ஸப்பில் புகைப்படத்துடன் நேரம், மேப் லொகேசனையும் அனுப்பலாம்.!

Read Entire Article