Video: அன்று பங்களாவிலிருந்து வெளியேற்றம்; இன்று புதிய அரசு வீடு: ராகுல் கம்பேக்..!

1 year ago 8
ARTICLE AD

கடந்த ஆண்டு  மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், தனது அதிகாரப்பூர்வ அரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்திக்கு, தற்போது சுனேரி பாக் சாலையில் உள்ள பங்களா எண். 5 வழங்கப்பட்டுள்ளதாகவும், ராகுல் சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா பங்களா எண். 5, சுனேஹ்ரி பாக் சாலையில் சென்ற பிறகு, அந்த பங்களா  குறித்தான பேச்சுகள் எழ ஆரம்பித்துள்ளது.

அன்று: காலி செய்த ராகுல்

காந்தி எம்.பி.யாக ஆனதில் இருந்து, துக்ளக் லேன் 12ல் அவரது இல்லம் இருந்தது. இருப்பினும், அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, அந்த வீட்டை அவர் காலி செய்தார்.

காங்கிரஸ் தலைவர் பின்னர் அவரது தாயார் சோனியா காந்தியின் 10, ஜன்பத் இல்லத்திற்கு குடிபெயர்ந்தார் மற்றும் அவரது தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்ட பிறகும் அங்கேயே வசித்து வருகிறார்.

இன்று: பங்களாவில் குடியேறப் போகும் ராகுல்:

காந்தி லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவராக ஆனவுடன்,  ( கேபினட் அமைச்சர் பதவிக்கான அந்தஸ்து இருப்பதால்)  அவருக்கு வகை 8  பங்களாவுக்கு உரிமை உண்டானவராக உருவெடுத்துள்ளார்.   இந்நிலையில், ராகுல் காந்தி குடியேறவுள்ள பங்களா குறித்தான வீடியோ வெளியாகியுள்ளது.

Delhi: (In Visual) Congress leader Rahul Gandhi's new residence pic.twitter.com/PXSKk3vlFZ
— IANS (@ians_india) July 26, 2024

இதை பார்த்த பலரும், அன்று அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார். இன்று , எதிர்க்கட்சித் தலைவராக, அதைவிட மிகப் பெரிய பங்களாவிற்கு செல்லவுள்ளார் என்று கருத்துகள் வருவதை பார்க்க முடிகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் ( மோடி பெயர் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்தமைக்காக ) செய்யப்பட்டார்.இதன் விளைவாக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் கீழ் அவரது மக்களவை உறுப்பினர் பதவியை நீக்குவதற்கு வழிவகுத்த அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, அதே ஆண்டு ஆகஸ்டில் அவர் மீண்டும் மக்களவை உறுப்பினராக ( எம்.பி )  சேர்க்கப்பட்டார்.

Read Entire Article