தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மகளும் பிரபலமான நடிகையுமான வரலட்சுமி சரத்குமாருக்கும் அவரின் காதலர் நிக்கோலாய் சச்தேவுக்கும் கடந்த ஜூலை 2ம் தேதி தாய்லாந்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. மெஹந்தி, ஹல்தி, சங்கீத் உள்ளிட்ட திருமணத்துக்கு முன்னதான கொண்டாட்டங்கள் மிக சிறப்பாக சென்னையில் நடைபெற்றது.

ஏராளமான திரை பிரபலங்கள் அந்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் திரை பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் தாய்லாந்தில் நடைபெற்ற வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமண புகைப்படங்கள் மட்டும் பகிரப்படாமல் இருந்தன. தற்போது அந்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டிங்காகி வருகின்றன. புகைப்படங்களை வைத்து பார்க்கையில் அவர்களின் திருமணம் கிறிஸ்தவ முறைப்படியும் இந்து முறைப்படியும் நடந்ததாக தெரிகிறது.

வரலட்சுமி சரத்குமார் குந்தன் நகைகளுடன் சிவப்பு நிற புடவையில் ஜொலிக்க நிக்கோலாய் சச்தேவ் பாரம்பரிய முறைப்படி பட்டு வேஷ்டி சட்டையில் தோன்றினார். அதே நேரத்தில் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் வெள்ளி நிற கவுனில் வரலட்சுமியும் நிக்கோலாய் சச்தேவ் ஆஃப்-ஒயிட் பிளேஸரிலும் காணப்பட்டார்.

திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரும் அதற்கு ஏற்ற உடைகளில் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தற்போது வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மகளுடன் ராதிகா சரத்குமார்