Vadapalani to Poonamallee Metro Rail : வடபழனி டூ பூந்தமல்லி மெட்ரோ ரயில் ரெடி.! எப்போ தொடங்குது ரயில் சேவை.? வெளியான சூப்பர் அப்டேட்

1 month ago 7
ARTICLE AD

சென்னையில் போக்குவரத்து நெரிசல்

சென்னையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் தவித்து வந்த நிலையில், மெட்ரோ ரயில் திட்டத்தால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அந்த வகையில் ஒரு இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேர்வதற்கு மெட்ரோ ரயில் பெரும் உதவியாக உள்ளது. அந்த வகையில் தற்போது சென்னை எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் என முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் சென்னையில் பல இடங்களை இணைக்கும் வகையில் பல கட்டங்களாக மெட்ரோ ரயில் திட்டம் செயப்படுத்தப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயில் திட்டம்- பொதுமக்கள் வரவேற்பு

மெட்ரோ சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் மாதாவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன
அதில் ஒரு பகுதிதான் பூந்தமல்லி முதல் வடபழனி மெட்ரோ ரயில் திட்டம், இதில் முதல் கட்டமாக பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையம் முதல் போரூர் சந்திப்பு வரையிலான 14.6 கி.மீ நீளமுள்ள வழித்தடம் 4-ஐ (மஞ்சள் வழித்தடம்) பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்க மெட்ரோ இரயில்வே பாதுகாப்பு ஆணையர் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் அனுமதி வழங்கினார். இதில் 10 நிலையங்கள் உள்ளன. ஆரம்பத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் போரூர் சந்திப்பு இடையே 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டது.

வடபழனி டூ பூந்தமல்லி மெட்ரோ ரயில்

ஆனால் மார்ச் 15ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படாத நிலை உருவானது. தற்போது சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. இதனையடுத்து இன்னும் ஒரு வார காலத்தில் புதிய அரசு பதவியேற்கவுள்ளது. எனவே அதிகபட்சமாக 10 முதல் 15 நாட்களுக்குள் பூந்தமல்லி முதல் வடபழனி வரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் போரூர் சந்திப்பு இடையே 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போரூர் சந்திப்பு முதல் வடபழனி வரை, ஒரு நேரத்தில் ஒவ்வொரு திசையிலும் ஒரு இரயில் மட்டுமே இயக்கப்படவுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

10 நாட்களில் மெட்ரோ ரயில் சேவை

தற்போது பூந்தமல்லியில் இருந்து போரூர் இடையிலான 10 ரயில் நிலையங்களில் அனைத்து பணிகளும் முடிவடைந்து திறப்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. ஆலப்பாக்கம், வளரசவாக்கம் போன்ற ரயில்களில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ரயில் நிலையங்களில் மட்டும் படிப்படியாக பொதுமக்களுக்கான சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது மெட்ரோ ரயில் திட்டத்தில் பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ளதால் வாகன நெரிசல் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் உரிய இடத்திற்கு சென்று சேர்வதற்கு வழி எற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read Entire Article