தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் பல மணி நேரங்கள் சாலைகளிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் உரிய இடங்களுக்கு சென்று சேரும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டது. எழும்பூர் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம். சென்னை விமான நிலையங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களுக்கு செல்ல மெட்ரோ ரயில் பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக சென்னையில் பல இடங்களில் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்டத்தில் 118.9 கி.மீ. தூரத்தில் 3 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல்கட்டமாக பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரை 14.64 கி.மீ. வழித்தடமாக பயணிகள் சேவைக்குத் தயார் நிலையில் உள்ளது. கடந்த மார்ச் மாதமே இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்ட நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் திறப்பு விழா தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில் வடபழனி-பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் எப்போது தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருகிற அக்டோபர் 11ஆம் தேதி இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், பிரதமர் மோடியுடன் இணைந்து முதல் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மெட்ரோ ரயில் சேவை அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில், எந்த எந்த ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் நின்று செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி, முல்லைத்தோட்டம், கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல், தெள்ளியாரகரம், போரூர் பைபாஸ் போரூர், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர் ஆகிய ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் நிலையப்பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. தற்போது படிகள் இணைக்கும் பணிகள் நின்று செல்லும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரம் ஆலப்பாக்கம், சாலிகிராமம் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி முழுமையாக முடிவடையாத காரணத்தால் இந்த ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் நிற்காது என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் நிலையங்களில் தற்போது கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், மற்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே இந்த அக்டோபர் 11ஆம் தேதி வடபழனி- பூந்தமல்லி வழித்தடத்தில் இந்த இரண்டு ரயில் நிலையங்களில் மட்டும் மெட்ரோ ரயில் நிற்காது எனவும், விரைவில் அனைத்து பணிகளும் முடிவடைந்து ஆலப்பாக்கம், சாலிகிராமம் ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழித்டத்தில் பயணம் செய்ய டிக்கெட் கட்டணம் 35 முதல் 45 ரூபாய் வரை வசூல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.