Uttar Pradesh: ஒரு மாதம் சம்பளத்தை இழக்கும் 13 லட்சம் அரசு ஊழியர்கள்? - உ.பி. அரசு அதிரடி! ஏன்?

2 years ago 34
ARTICLE AD
<p>உத்தர பிரதேச மாநிலத்தில் அரசு பணியாளர்கள் தங்களின் அசையும் அசையா சொத்து விவரங்களை ஆக.,31-ம் தேதிக்குள் சமர்பிக்காவிட்டால் இந்த மாதம் &nbsp;சம்பளம் வழங்கப்படாது என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p>அரசு நிர்வாகத்தில் நடக்கும் ஊழலை தடுக்கும் வகையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு புதிய கடந்தாண்டு (2023) ஆகஸ்ட் மாதம் புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன் படி, அரசு வேலை செய்பவர்கள் அனைவரும் தங்களது அசையும், அசையா சொத்து விவரங்களை அரசின் இணையதளமான Manav Sampada என்பதில் டிசம்பர் 31,2023-க்குள் சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. ஆனால், பெரும்பாலான பணியாளர்கள் விவரங்களை தாக்கல் செய்யாததால் அதற்கான கால அவசாகம் இந்தாண்டு (2024) ஜூன் 30- வரை நீட்டிக்கப்பட்டது; தொடர்ந்து ஜூலை 31 கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டது. இறுதியான ஆகஸ்ட் 31,ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 31-ம் தேதிக்குள் விவரங்களை ஆன்லைன் சமர்பிக்காவிட்டால் அரசு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்று முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் அறிவித்துள்ளார். மேலும், யாரெல்லாம் விவரங்களை சமர்பிக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p> <hr /> <p>&nbsp;</p>
Read Entire Article