USS Gerald Warship Issue: அவசரத்துக்கு கூட போக முடியாது போலயே.! ஈரானை தாக்க வந்த அமெரிக்க படைகளுக்கு புதுவித சோதனை.!

1 month ago 6
ARTICLE AD

ஈரானை எந்த நேரத்திலும் தாக்கும் விதமாக அமெரிக்க படைகள் மத்திய கிழக்கில் தயார் நிலையில் உள்ளன. இதனால், எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் என்ற சூழலும், பதற்றமும் நிலவுகிறது. இதற்கு இடையே, அங்கு நிறுத்தப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் கப்பலில், கழிவறைகளால் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

யுஎஸ்எஸ் ஜெரால்ட் போர்க்கப்பலில் என்ன பிரச்னை.?

உலகின் மிகப் பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கடலில் உள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது போர் நிறுத்தத்தை இரண்டாவது முறையாக நீட்டிக்க முடிவு செய்திருப்பது, கழிப்பறை அடைப்புகள் மற்றும் கழிவுநீர் பிரச்னைகள் போன்ற வளர்ந்து வரும் பிரச்னைகளின் பட்டியலாக உருவெடுத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம், வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிகோலஸ் மதுரோவை கைப்பற்றுவதில் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு முக்கிய பங்கு வகித்தது. அந்த பணிக்குப் பிறகு, ஈரான் மீதான அமெரிக்காவின் சாத்தியமான தாக்குதல்களுக்கு தங்கள் பணி நீட்டிக்கப்படும் என்பதை குழுவினர் அறிந்தனர். மேலும், இப்போது மற்றொரு விமானம் தாங்கிக் கப்பலுடன் சேர மத்திய கிழக்கு நோக்கிச் செல்கின்றனர்.

8 மாதங்களாக கடலில் உள்ள யுஎஸ்எஸ் ஜெரால்ட்

பொதுவாக, அமைதி காலத்தில் ஒரு விமானம் தாங்கிக் கப்பல் நிறுத்தம் 6 மாதங்கள் நீடிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால், யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஃபோர்டின் மாலுமிகள் 8 மாதங்களாக கடலில் உள்ளனர். இந்த காலம் 11 மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாம் என்று ஓய்வுபெற்ற கடற்படை உயரதிகாரி ஒருவர் கூறியுள்ள நிலையில், இது, ஒரு அமெரிக்க கடற்படைக் கப்பலின் தொடர்ச்சியான நிறுத்தத்திற்கான சாதனையை முறியடித்தது.

கழிவறை அமைப்பில் பிரச்னை

இவ்வாறு கடலில் 8 மாதங்கள் தங்குவது கப்பலையே பாதிக்கிறது. பராமரிப்பு மற்றும் மேம்படுத்தல்கள் ஒத்திவைக்கப்படுவதால், உபகரணங்கள் பழுதடைகின்றன. அந்த கப்பலில் உள்ள பிளம்பிங் அமைப்பு மோசமடைந்து வருவதாக, கடந்த ஜனவரி மாதம் NPR செய்தி வெளியிட்டது. 13 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட இந்த கேரியரில், செயல்படாத கழிப்பறைகள் உள்ளன. மாலுமிகள் கசிவுகளை சரிசெய்ய 24 மணி நேரமும் உழைக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், இது ஒரு தொடர்ச்சியான குழாய் அமைப்பு என்பதால், ஒரு இடத்தில் அடைத்துக்கொண்டாலும், மொத்த கழிவறைகளுக்கும் பிரச்னை ஏற்படும்.

கோபத்திலும், வருத்தத்திலும் உள்ள மாலுமிகள்

இதனால், கப்பலில் உள்ள பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கப்பலின் இயக்கங்களை சுற்றி உள்ள ரகசியம் காரணமாக, குடும்பத்தினரிடமும் அவர்களால் தொடர்பு கொள்ள முடியாது. இதனால், அவர்கள் கோபமும், வருத்தமும் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் இரண்டு அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள் இருப்பது அரிதானது. மேலும், அவை டஜன் கணக்கான போர் விமானங்களை சுமந்து செல்வதால், ஆயிரக்கணக்கான மாலுமிகள் அதில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையைவிட, போர் புரிவது மிகவும் சுலபம் தான் என்கிற நிலையில் அவர்கள் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

Read Entire Article