USA Trump: அமெரிக்கர்களின் கனவை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது என அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் பேச்சு:

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுஇப்பேற்றபின், காங்கிரஸின் முதல் கூட்டுக் கூட்டத்திற்கு டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றார். வரவிருக்கும் மாதங்களுக்கான தனது திட்டங்களை முன்வைக்கும் போது, கேபிடலில் பலத்த ஆரவாரங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் மற்றும் அமெரிக்க மக்களை நோக்கி உரையாற்றத் தொடங்கிய ட்ரம்ப், "அமெரிக்கா திரும்பி வந்துவிட்டது" என்று கூறி தனது பேச்சை தொடங்கினார். முன்னதாக நேற்று அவர் வெளியிட்ட சமூகவலைதள பதிவில், "நாளை இரவு பெரியதாக இருக்கும். நான் அதை அப்படியே கூறுவேன்" என குறிப்பிட்டு இருந்தார்.

”அமெரிக்கா இஸ் பேக்” - ட்ரம்ப்

அவையில் பேசிய ட்ரம்ப், “அமெரிக்காவின் உத்வேகம் திரும்பியிருப்பதைப் தெரிவிக்க நான் இந்த சபைக்குத் திரும்புகிறேன். எங்கள் உற்சாகம் திரும்பியிருக்கிறது. எங்கள் பெருமை திரும்பியிருக்கிறது. எங்கள் நம்பிக்கை திரும்பியிருக்கிறது. மேலும் அமெரிக்க கனவு எழுச்சி பெற்று வருகிறது - முன்பை விட பெரியதாகவும் சிறப்பாகவும் உள்ளது. அமெரிக்காவின் கனவு யாராலும் தடுத்து நிறுத்த முடியாதது. மேலும் நமது நாடு உலகம் இதுவரை கண்டிராத, ஒருவேளை மீண்டும் ஒருபோதும் காணாத ஒரு கம்பேக்கின் நுணியில் உள்ளது.

”ஆறே வாரம் தான்” - ட்ரம்ப் பெருமிதம்

ஆறு வாரங்களுக்கு முன்பு நான் இந்த தலைநகரின் குவிமாடத்தின் கீழ் நின்று அமெரிக்காவின் பொற்காலத்தின் விடியலைப் பிரகடனப்படுத்தினேன். அந்த தருணத்திலிருந்து, நமது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான சகாப்தத்தை அறிமுகப்படுத்துவது விரைவான மற்றும் இடைவிடாத நடவடிக்கையாகவே இருந்து வருகிறது. பெரும்பாலான நிர்வாகங்கள் 4 ஆண்டுகள் அல்லது 8 ஆண்டுகளில் சாதித்ததை விட 43 நாட்களில் நாங்கள் அதிகமாகச் சாதித்துள்ளோம். மேலும் நாங்கள் இப்போதுதான் தொடங்கியிருக்கிறோம். எனக்கு கிடைத்த வெற்றி பல தசாப்தங்களாக காணப்படாத ஒரு ஆணையை எனக்கு வழங்கியுள்ளது. அமெரிக்காவிற்குத் தேவையான எதிர்காலத்தை உருவாக்க, அமெரிக்காவிற்குத் தேவையான மாற்றத்தை வழங்க எனது நிர்வாகம் ஒவ்வொரு நாளும் போராடுகிறது” என ட்ரம்ப் பேசினார்.

எதிர்க்கட்சிகள் மீது சாடல்:

ட்ரம்ப் பேசும்போது ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். எலான் மஸ்க் திருடுகிறார் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி நின்றனர். அவர்களை நோக்கி பேசிய ட்ரம்ப், “இது காங்கிரசுக்கு நான் ஆற்றும் ஐந்தாவது உரை, மீண்டும் ஒருமுறை, என் முன்னால் இருக்கும் ஜனநாயகக் கட்சியினரைப் பார்க்கும்போது, அவர்களை மகிழ்விக்கவோ, அவர்களை நிற்கவோ, சிரிக்கவோ, கைதட்டவோ என்னால் எதுவும் சொல்ல முடியாது என்பதை உணர்கிறேன். அதேநேரம், இந்த வார இறுதியில், அமெரிக்காவில் முக்கியமான கனிமங்கள் மற்றும் அரிய மண் தாதுக்களின் உற்பத்தியை வியத்தகு முறையில் விரிவுபடுத்த வரலாற்று நடவடிக்கை எடுப்பேன்” என டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளார்.