2026ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட மத்திய அரசுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பதற்கான அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகள், 2026ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன. அதேபோல முதன்மைத் தேர்வுகள் ஆகஸ்ட் 21ஆம் தேதியில் நடக்க உள்ளன.

என்னென்ன தேர்வுகள்?

யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), ஆண்டுதோறும் பல்வேறு மதிப்புமிக்க தேர்வுகளை நடத்துகிறது. அவற்றில் சிவில் சர்வீஸ் தேர்வு, பொறியியல் சேவை தேர்வு, இந்திய வனப் பணி தேர்வு, தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) தேர்வு, ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை (CDS) தேர்வு, மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) தேர்வு, ஒருங்கிணைந்த மருத்துவ சேவை (CMS) தேர்வு, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) தேர்வு, ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி தேர்வு, மற்றும் இந்திய பொருளாதார சேவை/இந்திய புள்ளியியல் சேவை தேர்வு ஆகியவை அடங்கும். இவை பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்ற, தேர்வர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்குகின்றன.

இந்த நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுகள், 2026ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன. அதேபோல முதன்மைத் தேர்வுகள் ஆகஸ்ட் 21ஆம் தேதியில் நடக்க உள்ளன. இந்தத் தேர்வுக்கு மாணவர்கள் 2026, பிப்ரவரி 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.

பிற தேர்வு அட்டவணை

அதேபோல என்டிஏ எனப்படும் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் சிடிஎஸ் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளுக்கான தேர்வுகள் (NDA and CDS exams) முறையே ஏப்ரல் 12 மற்றும் செப்டம்பர் 13ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. சிஏபிஎஃப் தேர்வு எனப்படும் மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) தேர்வுகள் ஜூலை 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன. எனினும் தேவையுள்ள நேரங்களில், தேர்வு தேதிகளில் மாற்றம் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://upsc.gov.in/sites/default/files/Calendar-2026-Engl-150525_5.pdf