Upcomomg 7 Seater: இனிமே எல்லாமே 7 சீட்டர் மயம் தான்..! மொத்தமா 9 ப்ராண்ட்கள், ஹைப்ரிட், EV, டர்போ..! முழு லிஸ்ட்

4 months ago 10
ARTICLE AD

Upcomomg 7 Seater:  இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள ஒன்பது 7 சீட்டர் கார் மாடல்களில் ஹைப்ரிட், மின்சாரம் மற்றும் டர்போ பெட்ரோல் எடிஷன்களும் அடங்கும்.

அடுத்தடுத்து களமிறங்கும் 7 சீட்டர்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 7 சீட்டர் எஸ்யுவி பிரிவில் வலுவான டிமாண்ட் நீடிக்கிறது. உள்ளூர் நிறுவனமான மஹிந்த்ரா தற்போது அதில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால், அந்த நிலையை மாற்றும் வகையில் முன்னணி நிறுவனங்கள் சார்பில் அடுத்தடுத்து 7 சீட்டர் மாடல்கள் களமிறக்கப்பட உள்ளன. ஒருவேளை புதிய மூன்று வரிசை இருக்கைகளை கொண்ட காரை வாங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தால், 2026-27 காலகட்டத்திற்குள் பல மாடல்கள் வரிசைகட்ட உள்ளன. குறிப்பிடத்தக்க்க வகையில் வரவிருக்கும் மாடல்கள் பெட்ரோல், டீசல், மின்சாரம் மற்றும் ஹைப்ரிட் என பலதரப்பட்ட பவர்ட்ரெயின்களை கொண்டிருக்கின்றன. அந்த வகையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள 7 சீட்டர் மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

அப்-கமிங் டாப் 7 சீட்டர் மாடல்கள்:

1 & 2. 7 சீட்டர் மாருதி & டொயோட்டா SUV

மாருதி சுசூகி இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய மூன்று வரிசை இருக்கைகளை கொண்ட ப்ரீமியம் எஸ்யூவியை அறிமுகப்படுத்த உள்ளது . இது க்ராண்ட் விட்டாராவை அடிப்படையாகக் கொண்டு அதன் வடிவமைப்பு, அம்சங்கள், ப்ளாட்ஃபார்ம் மற்றும் பவர்டிரெய்ன் தேர்வுகளைப் பகிர்ந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளது. இதேபோன்று டொயோட்டா நிறுவனமும் தனது அர்பன் க்ரூசர் ஹைரைடரின் 7 சீட்டர் எடிஷனை தீவிரமாக சோதனை செய்து வருகிறது, இது 2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு எஸ்யுவிக்களும், அவற்றின் 5-சீட்டர் மாடல்களை விட நீளமாகவும் அதிக இடவசதியுடனும் இருக்கும். இன்ஜின் ஆப்ஷன்களில் 1.5L K15C பெட்ரோல் மைல்ட் ஹைப்ரிட் மற்றும் 1.5L அட்கின்சன் சைக்கிள் ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஆகியவை இடம்பெற வாய்ப்புள்ளது.

3. எம்ஜி ஸ்டார்லைட் 560

JSW MG மோட்டார் இந்தியா, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி ஒரு புதிய ப்ளக்-இன் ஹைப்ரிட் எஸ்யுவியை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது. இது சீனாவில் விற்கப்படும் வூலிங் ஸ்டார்லைட் 560 மாடலை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வாய்ப்புள்ளது. உலகளவில், இந்த எஸ்யுவி 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 20.5kWh பேட்டரி பேக்குடன் கிடைக்கிறது. ஸ்டார்லைட் 560-ன் முழு மின்சார பதிப்பையும் அறிமுகப்படுத்தவும் பரிசீலனை நடைபெறுகிறதாம். இதில் 56.7kWh பேட்டரி பேக்குடன், முன்புறம் பொருத்தப்பட்ட மின்சார மோட்டார் இணைக்கப்பட்டிருக்கும்.

4. ஹுண்டாய் Ni1i

ஹுண்டாய் Ni1i என்ற கோட்நேமை கொண்டுள்ள ப்ராண்டின் புதிய 7 சீட்டர் ப்ரீமியம் எஸ்யுவி, தயாரிப்பு வரிசையில் அல்கசார் மற்றும் டூசானுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த புதிய 3 வரிசை இருக்கைகளை கொண்ட எஸ்யுவி பற்றிய விவரங்கள் பெரிய அளவில் இதுவரை வெளியாகவில்லை. இது தற்போது சீனாவில் விற்பனையில் உள்ள டூசானின் நீண்ட வீல்பேஸ் எடிஷனை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல், இன்ஜின் மற்றும் ஹைப்ரிட் ஆகிய இரண்டு விருப்பங்களையும் உள்ளடக்கிய அதன் பவர்ட்ரெய்ன்களை புதிய தலைமுறை க்ரேட்டாவுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்: Skoda Slavia: புத்தம் புதுசா ஸ்கோடா ஸ்லாவியா..!ஃபேஸ்லிஃப்டில் வந்த அப்க்ரேட்களின் விவரங்கள் - விலை எப்படி?

5. கியா சொரெண்டோ

கியா சொரெண்டோ இந்திய சந்தையில் அந்த நிறுவனத்தின் முதல் வலிமையான ஹைப்ரிட் எஸ்யுவி ஆக இருக்கலாம். தொடர்ந்து 2027-ல் புதிய செல்டோஸ் ஹைப்ரிட் எடிஷன் அறிமுகமாகும். சர்வதேச சந்தையில் சக்திவாய்ந்த 1.6 லிட்டர் TGDi பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மற்றும் 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியாவிற்கான சொரெண்டோ எடிஷன், தற்போதுள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை அடிப்படையாகக் கொண்ட முற்றிலும் புதிய ஹைப்ரிட் சிஸ்டத்துடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6. டாடா சஃபாரி EV

உள்நாட்டில் 'டெய்ரோனா' என்ற கோட்நேமை கொண்ட புதிய டாடா சஃபாரி EV , அடுத்த ஓரிரு மாதங்களில் உற்பத்திக்கு வரவுள்ளதுடன், 2026 தீபாவளிப் பண்டிகையின்போது அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த மின்சார வாகனமானது ஹாரியர் EV-யில் உள்ள 65kWh மற்றும் 75kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களை அப்படியே தொடரக்கூடுமாம். உயர் ரக மாடல்களில், இது இரட்டை மோட்டார் அமைப்புடன் கூடிய AWD (டாடா மோட்டார்ஸால் QWD எனக் குறிப்பிடப்படுகிறது) சிஸ்டத்தைப் பெறும்.

7. புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ட்சுனர்

புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் 2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உலகளவில் அறிமுகமாகும் என்றும், அதைத் தொடர்ந்து இந்தியாவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்களின்படி, இந்த புதிய எஸ்யுவி லைன்-அப்பில் ADAS தொகுப்பு மற்றும் புதிய டச்ஸ்க்ரீன், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். இதன் வடிவமைப்பு புதிய டொயோட்டா ஹிலக்ஸை பெரிதும் பிரதிபலிக்குமாம். 2026 டொயோட்டா ஃபார்ட்சுனரில், தற்போதுள்ள 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

8 & 9. ரெனால்ட் & நிசான் 7 சீட்டர்

ரெனால்ட் நிறுவனம் 7 சீட்டர் டஸ்டர் காரை 2027-ஆம் ஆண்டில் உள்ளூரில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த எஸ்யுவியின் ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் ஸ்டைலிங், 4,570 மிமீ நீளம், 1,810 மிமீ அகலம் மற்றும் 1,710 மிமீ உயரம் கொண்ட டேசியா பிக்ஸ்டர் காரை அடிப்படையாகக் கொண்டிருக்கும். இது டஸ்டர் காரில் உள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.8 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெய்ன்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. 7 சீட்டரானது அதன் 5 இருக்கைகள் கொண்ட மாடலை விட நீளமாகவும் அதிக இடவசதியுடனும் இருக்கும். 7 இருக்கைகள் கொண்ட ரெனால்ட் டஸ்டரின் நிசானின் ரீபேட்ஜ் எடிஷன் 2027-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் நிசான் டெக்டானைப் போலவே, இதன் வடிவமைப்பும் நிசான் பேட்ரோல் எஸ்யுவியிலிருந்து பெரிதும் உத்வேகம் பெற்றிருக்கக்கூடும்.

Read Entire Article