Upcoming Facelift SUVs: வரிசை கட்டும் எஸ்யுவிக்கள் - ஃபேஸ்லிஃப்ட் அப்க்ரேட் மோடில் டாடா, மஹிந்த்ரா, ஸ்கோடா கார்கள்

2 months ago 4
ARTICLE AD

Upcoming Facelift SUV in India: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா, மஹிந்த்ரா மற்றும் ஸ்கோடா ஆகிய நிறுவனங்களின் எஸ்யுவிக்கள், ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டு விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளன.

ஃபேஸ்லிஃப்ட் மோடில் எஸ்யுவி கார்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பல எஸ்யுவிக்கள், விரைவில் மேம்படுத்தப்பட்டு ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் சந்தைப்படுத்தப்பட உள்ளன. இவை லேசான மாற்றாங்களாக இருக்காமல், மிகப்பெரிய அப்க்ரேட்களாக அமைய உள்ளது. இதன் மூலம் தங்களது கார்களின் விற்பனையை தொடர்ந்து நேர்மறையான நிலைக்கு கொண்டு செல்ல உற்பத்தி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இப்படி குறிப்பிடப்படும் கார் மாடல்கள் அனைத்துமே நடப்பாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. அதில் ஒன்று அடுத்த ஒரு சில தினங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அந்த வகையில் வாடிக்கையாளர்களை கவனத்தை ஈர்க்கப்போகும், டாப் 3 ஃபேஸ்லிஃப்ட் எஸ்யுவி கார்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

1. மஹிந்த்ரா தார் 3 டோர் ஃபேஸ்லிஃப்ட்

விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ள ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்யுவிக்களில் முதன்மையானதாக, மஹிந்த்ராவின் 3 டோர் தார் கார் மாடல் உள்ளது. ராக்ஸ் மாடலை அடிப்படையாக கொண்டு இந்த 3 டோர் தாரில் அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, கூடுதல் தொழில்நுட்ப அம்சங்கள், மேம்படுத்தப்பட்ட வசதிகள் மற்றும் டிசைனில் சிறிய மாற்றம் ஆகியவற்றை வழங்க மஹிந்த்ரா முனைப்பு காட்டியுள்ளது. பவர்ட்ரெயில் எந்தவித மாற்றமும் இன்றி, இன்ஜின் மற்றும் பெட்ரோல் ஆப்ஷன்கள் அப்படியே தொடர உள்ளது. தற்போதைய சூழலில் இந்த காரின் விலை ரூ.10.32 லட்சத்தில் தொடங்கி ரூ.20.65 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. இந்த காரின் புதிய எடிஷன் அக்டோபர் மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படலாம்.

2. டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்

டாடா நிறுவனம் சார்பில் அதிகளவில் விற்பனையாகும் எஸ்யு ஆன பஞ்சிற்கு மிகப்பெரிய அப்க்ரேட்களை வழங்கும் விதமாக, வரப்போகும் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி பஞ்சின் புதிய எடிஷனானது புத்துயிரூட்டப்பட்ட தோற்றம், கூடுதல் அம்சங்களை பெற்று மின்சார பஞ்ச் எடிஷனின் தாக்கத்தை பிரதிபலிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், சின்ஜி ஆப்ஷன் உட்பட தற்போதைய எடிஷனில் இருக்கும் பவர்ட்ரெயின் அப்படியே தொடரும் என கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் இந்த காரின் விலை ரூ.5.61 லட்சத்தில் தொடங்கி ரூ.9.30 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. வரும் நவம்பரில் இந்த கார் சந்தைப்படுத்தப்படலாம்.

3. ஸ்கோடா குஷக் ஃபேஸ்லிஃப்ட்

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மூன்றாவது முக்கிய எஸ்யுவியாக ஸ்கோடாவின் குஷக் உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த எடிஷனானது உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரண்டிலும் டிசைன் மாற்றங்களை பெறும் என கூறப்படுகிறது. உட்புறத்தில் லெவல் 2 ADAS உள்ளிட்ட குறிப்பிடத்தக்க அம்சங்கள் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாம். இதிலும் இன்ஜின் அடிப்படையில் எந்த மாற்றமும் இன்றி தற்போதைய சூழலில் அப்படியே தொடரும் என கூறப்படுகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் இந்த கார் சந்தைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் இந்த காரின் விலை ரூ.10.61 லட்சத்தில் தொடங்கி ரூ.18.43 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது.

மேற்குறிப்பிடப்பட்ட கார்களின் விலைகள் அப்க்ரேட் அடிப்படையில், ஃபேஸ்லிஃப்ட் எடிஷன்களுக்கு சற்றே அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Read Entire Article