இந்தியாவைப் பொறுத்தமட்டில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்தியாவில் விரைவில் பல்வேறு புதிய இரு சக்கர வாகனங்கள் அறிமுகமாக உள்ளது.

அவ்வாறு அறிமுகமாக உள்ள 5 புதிய இரு சக்கர வாகனங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Hero Xtreme 160R 4V:

ஹீரோ நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற இருசக்கர வாகனம் Hero Xtreme. இதன் புதிய வெர்சனாக அறிமுகமாக உள்ளது Hero Xtreme 160R 4V. டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இதில் உள்ளது. யுஎஸ்டி ஃப்ரன்ட் ஃபோர்க்ஸ் மற்றும் ட்ராக் டைமர் வசதி கொண்டது. இந்த பைக் எப்போது அறிமுகமாகும்? என்பது குறித்து விரைவில் தகவல் வெளியாக உள்ளது. இந்த பைக்கில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகள் இடம்பெற உள்ளது. இளைஞர்களை குறிவைத்தே இந்த பைக்கை தயாரித்து வருகின்றனர்.

2. Harley-Davidson Sprint 440:

உலகின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகனம் Harley-Davidson. இந்திய சந்தையிலும் இவர்களின் கார்களுக்கு என்று தனி வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், இவர்கள் இந்திய சந்தையில் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள இரு சக்கர வாகனம் Harley-Davidson Sprint 440. 440 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட உள்ளது. சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினான இது 27 எச்பி குதிரை ஆற்றல் கொண்டது. 38 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. இந்தியாவில் ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த புதிய Harley-Davidson Sprint 440 பைக் இந்தாண்டு இறுதியில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது

3. Updated Bajaj Pulsar NS200:

பஜாஜ் நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. குறிப்பாக, அவர்களின் மிகவும் வெற்றிகரமான பைக் பல்சர் ஆகும். இதன் புதிய அப்டேட் வெர்சனாக விரைவில் அறிமுகமாக உள்ள பைக் இந்த Updated Bajaj Pulsar NS200 ஆகும். இதில் 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. க்யூக்ஷிப்டர் வசதி உள்ளது. 4 ரைடிங் மோட் உள்ளது. ட்ராக்ஷன் கன்ட்ரோல் வசதி உள்ளது. ரேடியல் டயர்ஸ், அட்ஜஸ்டபிள் லெவர்ஸ் மற்றும் யுஎஸ்பி டைப் சி சார்ஜர் வசதி உள்ளது. இதில் 199 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. லிக்யூட் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்படுகிறது. 25.5 எச்பி குதிரை ஆற்றல் கொண்டது.

4. Updated Bajaj Pulsar RS200:

இந்திய சந்தையில் பஜாஜ் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள பைக் இந்த Updated Bajaj Pulsar RS200 ஆகும். 5 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகும். யுஎஸ்டி ஃப்ரன்ட் ஃபோர்க்ஸ் வசதி உள்ளது. 195.5 சிசி லிக்யூட் கூல்ட் எஞ்ஜிஜ் பொருத்தப்பட்டுள்ளது. 24.5 எச்பி மற்றும் 18.7 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. பழைய வேரியண்டில் இருந்து பல்வேறு மாற்றங்களுடன் இந்த புதிய Updated Bajaj Pulsar RS200 அறிமுகப்படுத்த உள்ளது.

5. Bajaj Adventure Bike:

பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள முதல் ஆஃப் ரோட் பைக்காக இந்த பைக் அறிமுகமாக உள்ளது. இந்தியாவில் இது பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ரைடிங் பொசிசன்ஸ், ஃப்ரன்ட் ஃபோர்க்ஸ், ஃபோர்க் கெய்டர்ஸ், வயர் ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 249 சிசி ஏர்/கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 24.5 பிஎஸ் மற்றும் 21.5 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. டிஎஃப்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்த பைக் அறிமுகமாக உள்ளது.