பிரிட்டனில் உள்ள லீட்ஸ் நகரில் பேருந்து தீ வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹேர்ஹில்ஸ் பகுதியில் திரண்ட போராட்டக்காரர்களில் ஒருவர் அங்கிருந்த நகர பேருந்து ஒன்றிற்கு தீ வைத்து அங்கிருந்த குடியிருப்பு பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு Yorkshire நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினரின் தகவலின்படி, இதுவரை யாருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்திற்கு ஒருவர் தீ வைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்தில் குழந்தைகள் உட்பட பொதுமக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.