Udhayanidhi: "தூங்கு மூஞ்சி அரசே..! வேளாண்துறை செயலாளர் எங்கே?” - தவெக அரசுக்கு உதயநிதி சரமாரி கேள்வி

3 weeks ago 4
ARTICLE AD

Udhayanidhi On TN Govt: நீண்ட நாட்களாக காலியாக உள்ள தமிழ்நாடு அரசு வேளாண் துறை செயலாளர் பதவியை நிரப்ப வேண்டும் என உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.

காலியாக உள்ள வேளாண்துறை செயலாளர் பதவி..!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அமைந்த பிறகு வேளாண்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியான, விவசாய கடன் தள்ளுபடி மற்றும் வேளாண் பட்ஜெட் தயாரிப்பு ஆகியவற்றில் முக்கிய பங்கு வகித்தார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக கடந்த செப்டம்பர் 11ம் தேதி பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் சமூக நீதித்துறை செயலாளராக இருந்த என். சுப்பையன் ஐஏஎஸ், கூடுதல் பொறுப்பாக வேளாண்துறையை கவனித்து வருகிறார். இந்நிலையில், அந்த பதவிக்கான முழு நேர செயலாளரை நியமிக்காதது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக அரசுக்கு உதயநிதி கேள்வி:

உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைச் செயலாளராக இருந்த சங்கர் ஐ.ஏ.எஸ்., தொல்லியல் ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகப் போகிறது. ஆனால், இப்போது வரை வேளாண் துறைக்கு முழுநேரப் பொறுப்பில் புதிய செயலாளர் நியமிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுவது. உழவர் பெருமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தனி நிதிநிலை அறிக்கையைக் கொண்ட வேளாண் துறை போன்ற ஒரு முக்கியத் துறைக்கு முழுநேரப் பொறுப்பில் செயலாளர்கூட இல்லாமல் இருப்பதை என்ன காரணம் சொல்லி இவர்களால் நியாயப்படுத்த முடியும்?
பருவமழை தொடங்கவுள்ள நேரத்தில், வேளாண்மைத் துறைக்கு நிலையான நிர்வாகத் தலைமையும், துரிதமான ஒருங்கிணைப்பும் தேவை என்பதை எவரும் மறுக்க முடியாது.

”பயிர்த்தள்ளுபடி மோசடி”

குறிப்பாக, விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்புடைய முடிவுகள் தாமதமின்றி எடுக்கப்படுவதற்கும், மாவட்ட அளவிலான பணிகளைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் இது அவசியமானது. இதனைக் கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய, துறை அமைச்சரும் முதலமைச்சரும் வேறு வேலைகளில் தான் மும்முரம் காட்டுகின்றனர். த.வெ.க. ஆட்சிக்கு வந்ததுமே, பயிர்க்கடன் தள்ளுபடியில் மோசடி செய்தார்கள். இயற்கையால் குறுவை பொய்த்து, த.வெ.க. அரசின் சிந்தனையற்ற செயல்பாட்டால் சம்பா சாகுபடியும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. இப்படித் தொடர் ஏமாற்றங்களால் விரக்தியில் உள்ள விவசாயப் பெருமக்கள், தமிழ்நாடெங்கும் போராடிவருகி ன்றனர்.

இதையும் படியுங்கள்: Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்

அடுத்தடுத்து வெடிக்கும் போராட்டங்கள்:

நேற்றுகூட, கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் வராததால், முத்துப்பேட்டையில் விவசாயிகள் சாலை மறியல் செய்துள்ளனர். தண்ணீர் திறந்துவிடக் கோரி, விவசாயிகள் வீராணம் ஏரியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். தேர்தல் அறிக்கையில் சொன்னபடி, பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடிசெய்ய வலியுறுத்தி, சென்னையில் வருகிற 14ஆம் தேதி, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கூறியுள்ளனர். இத்தகைய சூழலில், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைக்கு அனுபவம் வாய்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு, உழவர்களின் துயர் துடைப்பதற்கான பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும்.

உடனே நியமனம் செய்ய கோரிக்கை:

ஆனால், அந்தத் துறையைப் பொறுப்பு ஏற்பாட்டில் விட்டிருப்பது, வேளாண்குடிப் பெருமக்களின் நலனில் இந்த அரசுக்குத் துளியும் அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது. 'செயல்படாத அமைச்சர், இல்லாத செயலாளர்' எனத் த.வெ.க. ஆட்சியைப் போலவே வேளாண் துறையும் திண்டாடுகிறது. உலகுக்கே உணவளிக்கும் உழவைக் காப்பாற்றுவதில் இனியும் காலதாமதம் செய்யாமல், புதிய முழுநேர வேளாண்மைத் துறைச் செயலாளரை உடனடியாக நியமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசை வலியுறுத்துகிறேன்” என உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.

Read Entire Article