சிறு விளையாட்டு அரங்கம் தொடக்கம்

சென்னை அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பாக சேப்பாக்கம் - திருவல்லிகேணி சட்டமன்ற தொகுதியில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை ( Chief Minister's Mini Stadium) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் , தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருவைகுண்டம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ஆகிய இடங்களில் கட்டுப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கங்களையும் காணொலி காட்சி வாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதையும் படிங்க: ADMK - BJP Alliance: அதிமுக பாஜக கூட்டணி? "திமுகதான் எங்களுக்கு எதிரி" -எடப்பாடி பழனிசாமி.

3 கோடி மதீப்பிட்டில்:

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் 4.068 ஏக்கர் பரப்பளவில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கத்தின் பயிற்சிக் கூட கட்டடம் 396 சதுர மீட்டர் பரப்பளவில் வரவேற்பு பகுதி , ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித் தனியே உடைமாற்றும் அறைகள் , கழிப்பறைகள் , பொருட்கள் வைப்பறை , மேலாளர் அறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் சிறு விளையாட்டரங்கத்தில் திறந்த வெளி பார்வையாளர் மாடம் 265 நபர்கள் அமரும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் இரண்டு Cricket Turf அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல மதுரை , தூத்துக்குடி , சிவகங்கை மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கமும் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தில் உள்ள உடற் பயிற்சிக் கூடத்தில் ஒரு ஆண்டுக்கு 9 ஆயிரம் ரூபாயும், ஆறு மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாயும், மூன்று மாதத்திற்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், மாதம் ஆயிரம் ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை துணை முதலமைச்சர் திறந்து வைத்து Cricket Turf - ல் கிரிக்கெட் விளையாடினார். உடன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது

முதலமைச்சர் உத்தரவுப் படி ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர் தொகுதிகளிலும் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என 2022 - 2023 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டது. அதன் படி சென்னை சேப்பாக்கம் திருவல்லிகேணி சட்டமன்றத் தொகுதியில் 3 கோடி ரூபாய் மதிப்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல மதுரை , சிவகங்கை , தூத்துக்குடி மாவட்டங்களில் 3 கோடி ரூபாயில் கட்டுப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையிட்டு அரங்கத்தை திறந்து வைத்துள்ளோம். மொத்தமாக இன்று 12 கோடி ரூபாய் மதிப்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. அது இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எனது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் இருந்து 50 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 2 கோடியே 50 லட்சம் ரூபாய் அரசு சார்பாக விளையாட்டுத்துறை சார்பாக கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல மதுரை , தூத்துக்குடி மற்றும் சிவகங்கையில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்கள். மீதம் உள்ள தொகையை அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: BJP Minister: அமைச்சரின் பதவியையே பறித்த படுகொலை - லஞ்சம், தட்டி கேட்ட ஊராட்சி மன்ற தலைவருக்கு நேர்ந்த கொடூரம்

சேப்பாக்கம் திருவல்லிகேணி சிறு அரங்கத்தில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஏசி பொறுத்தப்பட்ட உடற்பயிற்சி கூடமாக உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் ஹிக்கி, 2 Cricket Truf, பார்வையாளர்கள் மடம் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தில் உள்ளது என தெரிவித்தார். மற்ற மாவட்டங்களில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு விளையாட்டுகள் போட்டிகள் நடைபெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மேலும் 9 மினி அரங்கம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு 22 மினி அரங்கம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்த பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்தாண்டு பட்ஜெட்டில் குறைந்து 25 மினி அரங்கம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளோம். அந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உள்ளே முடிக்க உள்ளோம் எனவும் இந்த விளையாட்டு அரங்கத்தை விளையாட்டு வீரர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.