பலத்த காற்று மற்றும் மழையுடன் கூடிய ரகசா என்ற சூப்பர் சூறாவளி புயல் ஹாங்காங்கை நிலைகுலையச் செய்துள்ளது. இந்த புயல் பல பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

ரகசா புயல்:

தென்கிழக்கு ஆசிய நாடுகளை நிலைகுலைய செய்திருக்கிறது ரகசா புயல். இந்த புயல் மிகத்தீவிரம் அடைந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் ஏற்பட்ட புயலிலேயே இந்த புயல் மிகவும் மோசமான ஒரு புயலாகவே பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த புயலை தொடர்ந்து ஹாங்காங்கில் மழை விடாமல் கொட்டித் தீர்த்திருக்கிறது. இந்த புயலின் கோரதாண்டவத்தால் ஹாங்காங்கின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மிதக்கிறது.

ஹோட்டலுக்குள் புகுந்த வெள்ள நீர்:

இந்த நிலையில் தான் ஹாங்காங்கின் கடற்கரை பகுதியில் உள்ள புல்லர்டன் ஓஷன் என்ற ஹோட்டலுக்குள் முட்டி மோதிக்கொண்டு வெள்ள நீர் உள்ளே செல்லும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

This happened at the Fullerton Hotel Ocean Park in Hong Kong a couple hours ago. I have never seen anything like this before.

I was up at 4 am taping my windows because water was just pouring in…

Ragasa is indeed a super Typhoon 🌀… pic.twitter.com/O59FJbGLsE

— Eric Yeung 👍🚀🌕 (@KingKong9888) September 24, 2025

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி அந்த ஹோட்டலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வெள்ள நீர் ஹோட்டல் கண்ணாடியை உடைத்த்துக்கொண்டு உள்ளே வருவதால் ஒரு நொடி அதிர்ச்சிக்குள்ளாகினர் என்ற சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அந்த வெள்ள நீரின் தாக்கம் இருந்தது. இது தொடர்பாக எரிக் என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், “ இது ஹாங்காங்கில் உள்ள ஃபுல்லர்டன் ஹோட்டல் ஓஷன் பார்க்கில் சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்தது.

இதற்கு முன்பு இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை. நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து என் ஜன்னல்களைத் தட்டிக் கொண்டிருந்தேன், ஏனென்றால் தண்ணீர் உள்ளே கொட்டிக் கொண்டிருந்தது... ராகசா உண்மையில் ஒரு சூப்பர் டைபூன்”என்று கூறியுள்ளார்.