TVK Vs DMK ; அமைச்சர் சேகர்பாபுவால் என் உயிருக்கு ஆபத்து - பரபரப்பு புகார் அளித்த TVK வேட்பாளர்

1 month ago 7
ARTICLE AD

அமைச்சர் சேகர்பாபுவால் என் உயிருக்கு ஆபத்து

சென்னை துறைமுக தொகுதி த.வெ.க வேட்பாளர் சினோரா அசோக் போட்டியிட்டுள்ளார். வாக்குப் பதிவு நாளான அன்று துறைமுக தொகுதியில் வைத்து திமுக வேட்பாளர் சேகர்பாபு அவரை தாக்கியதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததும் , இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் உடல் நிலை பாதிக்கப்பட்டு சினோரா அசோக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காவல் நிலையத்தில் சினோரா அசோக் புகாரும் அளித்தார்.  இந்த நிலையில் சினோரா அசோக் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தவெக வேட்பாளர் சினோரா அசோக் ;

வாக்குப்பதிவு நாளன்று சேகர்பாபு எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனது கட்சி அலுவலகத்தில் நின்றிருந்த போது சேகர்பாபு கூட்டத்தை கூட்டி வந்து மிரட்டினார். மேலும் அவரது ஆதரவாளர்கள் முகமூடி அணிந்து வந்து என்னை நோட்டமிட்டு கொண்டு இருக்கிறார்கள்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த என்னை மிரட்டினார்கள். வருகிற 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று வாக்கு எண்ணும் மையத்தில் வைத்தோ அல்லது வேறு பகுதிகளிலோ தனக்கு சேகர்பாபுவாலும் அவரது ஆதரவாளர்களாலும் என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருக்கிறது. உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால் தனக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை காவல் துறையிடம் கேட்டுள்ளோம் என்று தவெக வேட்பாளர் சினோரா அசோக் தெரிவித்துள்ளார்.

Read Entire Article