விஜயின் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் நீட்சியடைந்தவர் என்பதால் அவருக்கு 27ம் தேதி எதிர்மறையாக அமைவதாக பிரபல ஜோதிடர் ஷெல்வி தாமோதரன் தெரிவித்துள்ளார்.

2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களமிறங்குகிறது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் விஜய் வாழ்க்கையில் தொடர்ச்சியாக எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் தவெக தொண்டர்கள் கலங்கி போயுள்ளனர். குறிப்பாக விஜயின் விவாகரத்து வழக்கு, அவர் நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக மனைவி சங்கீதாவின் குற்றச்சாட்டு போன்றவை தவெகவினர் மத்தியில் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

இப்படியான நிலையில் பிரபல ஜோதிடர் ஷெல்வி தாமோதரன் தனியார் ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அவரிடம், விஜய்க்கு நடந்த சம்பவங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு ஒரு மனிதர் சமூகத்தில் பேசுபொருளாக இருக்கும்போது அவருக்கு நடக்கக்கூடிய விஷயம் கூட மிகப்பெரிய அளவில் பரபரப்பான விஷயமாக மாறுகிறது. விஜய் எனக்கு நல்ல நண்பர். அவர் அரசியலுக்கு வந்த பின்பு விக்கிரவாண்டி மாநாடு, கரூர் சம்பவம், கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தது, செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது, ஜனநாயகன் ஆடியோ நிகழ்ச்சி, ஜனநாயகன் வழக்கு, விஜய் விவகாரத்து சம்பவம் ஆகியவை 27ம் தேதியில் நடக்கிறது. அதன் கூட்டுத்தொகை 9. விஜயின் ஜாதகத்தில் செவ்வாய் நீட்சமடைந்தது. செவ்வாய் என்றால் 9ம் எண்ணை குறிப்பதாகும். அந்த எண் வரும் தேதிகளை விஜய் அதனை தவிர்ப்பது நல்லது என தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடன் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகள் பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “யார் வீட்டில் தான் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்னை இல்லாமல் இருக்கிறது சொல்லுங்கள். நம் வீட்டில் எல்லாம் பிரச்னையே நடக்காதா?. 10 ஆண்டுகளுக்கு முன் குடும்ப நல நீதிமன்றம் 2 தான் இருந்தது. இப்ப தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் எத்தனை இருக்கிறது என எண்ணிப் பாருங்கள்.

வளர்ச்சி வரும்போது பிரச்னைகள் வரும். ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னை என்றால் இங்கு எல்லாரும் அவரவர் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை இது தேர்தலில் எல்லாம் பெரிதாக எதிரொலிக்காது. விஜய்க்கு இருப்பதெல்லாம் அம்மா, அப்பா, கடவுள் என யார் சொல்லியும் கேட்காத ஒரு கூட்டம். அவர்கள் இதனை பாசிட்டிவாக தான் எடுத்துச் செல்வார்கள்.

ஒவ்வொரு வீட்டுக்கு ஒரு வாசப்படி இருக்கும். அதனால் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்க்காதீர்கள். அவர் எப்படி இருக்கிறார் என பாருங்கள். விஜயும், சங்கீதாவும் மீண்டும் ஒன்றாக சேர்ந்தால் என்ன பண்ணுவீர்கள் சொல்லுங்கள். விஜய் நடிப்பு, அரசியல் பயணத்தைப் பாருங்கள். இனியும் விஜய் தான் பேசுபொருளாக இருப்பார் எனவும் ஜோதிடர் ஷெல்வி தெரிவித்துள்ளார்.