TVK Vijay: முதல்வர் பதவி, 90 சீட்.. விஜய்க்கு கொடுக்கப்பட்ட ஆஃபர்கள்.. ஆதவ் அர்ஜூனா போட்ட லிஸ்ட்!

3 weeks ago 4
ARTICLE AD

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் பொருட்டு பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

தனித்து களமாடும் தவெக

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் நடிகராக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு புகழை சேர்த்துள்ள விஜய்க்கு அரசியலிலும் நல்ல வரவேற்பு உள்ளது. அவருக்கு கண்டிப்பாக குறிப்பிடத்தக்க வாக்கு முதல் தேர்தலிலேயே கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.

கூட்டணியில் தவெகவை சேர்க்க முயற்சி

இதனிடையே திமுகவை வீழ்த்தும் பொருட்டு அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தை இணைக்க பல கட்ட முயற்சிகளை பாஜக டெல்லி மேலிடம் மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் என பலரும் மறுத்தனர். எனினும் பேச்சுவார்த்தை நடந்தது உண்மை எனவும் சொல்லப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு அமைந்துள்ளது.

கொளத்தூரில் நடைபெற்ற அக்கட்சியின் நிகழ்ச்சியில் பேசிய அவர், “வெளியில் சொல்வது போல நம்ம அண்ணனுக்கு நிறைய ஆஃபர்கள் கொடுத்தார்கள். 50-50, 90 தொகுதிகள், இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் என பல சலுகைகள் கொடுக்கப்பட்டது. அதற்கு விஜய் சொன்ன ஒரே வார்த்தை எனக்கு ஆஃபர் தேவையில்லை. தமிழக மக்களுடைய உண்மையான நம்பிக்கையை என்றைக்கும் நான் உருவாக்கக்கூடிய மதச்சார்பற்ற, சமூக நீதிக்கான அரசாக தமிழக வெற்றிக் கழகம் இருக்கும் என்று சொன்னவர். முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு டெல்லிக்கு அடிபணிபவர் விஜய் கிடையாது.

பராசக்தி ரிலீஸாக வேண்டும் என்றால் போய் உள்துறை அமித்ஷாவை பார்ப்பது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு போன் போட்டு பேசுவது போல எங்கள் ஆள் கிடையாது. இன்றைக்கும் எங்களுடைய ஜனநாயகன் படம் சட்ட பிரச்னையில் இருக்கிறது. இஸ்லாமிய, கிறிஸ்தவ தோழர்களே நீங்கள் ஒன்றை புரிந்துக் கொள்ளுங்கள். முதலமைச்சர் பேரன் தயாரித்த பராசக்தி படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ஜனநாயகன் படம் இன்றைக்கு வரை ரிலீஸ் செய்யப்படாமல் இருக்க காரணம் அரசியல் தான்.

இந்த அரசியலை தைரியமாக விஜய் ஒருவரால் தான் எதிர்கொள்ள முடியும். எந்த எல்லைக்கு வேண்டுமாலும் செல்வேன் என சொல்லி விட்டார். அவரை எப்போதும், யாராலும் அடிமைப்படுத்த முடியாது. ஏனென்றால் இந்த கூட்டணி கணக்குகள் எல்லாம் 2026 தேர்தல் தூள் தூளாக்கப்படும். ஒரு சிங்கம் ஆடுடன் சேர்ந்து பாதுகாப்பை கொடுக்க முடியாது. நம்முடைய தலைவர் சிங்கம். மிகப்பெரிய ஆட்சியை உருவாக்க, பெரியார், அம்பேத்கரின் கொள்கையை உருவாக்க நாம் ஒரு மிகப்பெரிய அரசியலை உருவாக்கி கொண்டிருக்கிறோம்” என ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

Read Entire Article