TVK Vijay: திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக வாக்கு கேட்டுச் சென்ற பெண் நிர்வாகியை தாக்கியதாக முதிவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கில் தவெக வாக்கு சேகரிப்பு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக களம் கண்டுள்ளது. அக்கட்சியின் தலைவரான விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிகளில் அவர் ஒரு முறை மட்டுமே தேர்தல் பரப்புரை மேற்கொண்டாலும், அவருக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்க்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற நிர்வாகிகள் மீது, போதை ஆசாமி ஒருவர் தாக்குதல் நடத்த முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதியவர் தாக்க முயன்ற வீடியோ

சம்பவம் தொடர்பாக தவெகவைச் சேர்ந்தவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், புதன்கிழமை இரவு திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள கே.கே.நகர் பகுதியில் தவெக தோழர்கள் கட்சி தலைவர் விஜய்க்காக வீடு வீடாக வாக்கு சேகரிக்கச் சென்ற போது 60 வயது முதியவர் ஒருவர் குடிபோதையில் பெண் நிர்வாகிகளை அநாகரிகமாப் பேசி, செருப்பை வைத்து எறிந்ததோடு மட்டுமின்றி கம்பை வீசி அடித்ததால் பெண் நிர்வாகி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு தகாத வார்த்தைகள் பேசி திமுகவிற்கு ஆதரவாகப் பேசியுள்ளார். தவெக தோழர்கள் உடனடியாக கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட நபர் மீது புகாரளித்துள்ளனர். குற்றவாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இரவு திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள கே.கே.நகர் பகுதியில் நம் கழகத் தோழர்கள் அண்ணன் @TVKVijayHQ -க்காக வீடு வீடாக வாக்கு சேகரிக்கச் சென்ற போது 60 வயது முதியவர் ஒருவர் குடிபோதையில் நமது பெண்களை அநாகரிகமாப் பேசி, செருப்பை வைத்து எறிந்ததோடு மட்டுமின்றி கம்பை வீசி அடித்ததால்… pic.twitter.com/1qGG1xaBOu

— Sindhu Vote For Whistle (@sindhu_515) April 16, 2026

அநாகரீகமான, ஆபசமான பேச்சு

பதிவில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பிரச்னையின் தொடக்கப்புள்ளி என்ன? வாக்குவாதம் ஏற்பட்டது ஏன்? என்பது தொடர்பான எந்த தகவலும் இல்லை. இருப்பினும் அந்த வீடியோவின்படி, “மேல் சட்டை கூட அணியாத அந்த முதியவர் வீட்டின் கேட்டிற்கு அந்த பக்கமாக இருந்துகொண்டு, கையில் கட்டை எடுத்து தவெகவினரை தாக்கும் வகையில் ஆவேசமாக வீசியுள்ளார். அவருடன் இருந்த பெண்மணி தடுக்க முயன்றும், மீண்டும் மீண்டும் கட்டையை எடுத்து அடிக்க முயன்றுள்ளார். அநாகரீகமான ஆபாச வாஎத்தைகளையும் பேசி திட்டியுள்ளார். காவல்நிலையத்தில் புகாரளிப்பேன் எனவும் மிரட்டியுள்ளார். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து தவெகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

போலீசாருடன் வாக்குவாதம்

இதையடுத்து கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு சென்று தவெக நிர்வாகிகள் சார்பில் புகாரளிக்கப்பட்டது. மேலும் அந்த நபரை உடனடியாக அழைத்து விசாரணை நடத்தவும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், மாலை 6 மணிக்கு மேல் வயதானவர்கள் யாரையும் அழைத்து வந்து விசாரணை நடத்துவதில்லை என காவல்துறை தரப்பில் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியில் விரைவில் குறிப்பிட்ட நபரை அழைத்து விசாரணை நடத்தப்படும் என காவல்துறை உறுதியளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் கலைந்து சென்றுள்ளனர்.