TVK Vijay: அவங்க அப்பாவால் கூட அது முடியவில்லை… திமுக குறித்து விஜய் கடும் விமர்சனம்

1 month ago 5
ARTICLE AD

தஞ்சாவூர்: இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வருவது என்பது நடக்காத காரியம். அவங்க அப்பாவால் கூட அது முடியவில்லை என்று திமுக அடுத்ததாக ஆட்சிக்கு வரமுடியாது என தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிப்பட்டியில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது: தமிழகத்துல இருக்கிற எல்லா ஆறுகளையும் இணைப்போம், இந்தியாவுலயே நாங்கதான் அதை பத்தி முதல்ல யோசிச்சோம் அப்படின்னு பெருமையா சொல்லிக்கிற இந்த திமுக கவர்மெண்ட் அவங்களோட சாமர்த்தியம்  என்னன்னு சொல்லவா?" இந்த மாதிரி பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்த உடனே செய்ய மாட்டாங்க. அந்த ஆட்சி முடியுற டைம்ல, அந்த கடைசி ஆறு மாசம், அந்த ஒரு வருஷம், அந்த ஒன்றரை வருஷத்துல அதுக்கான திட்டத்தை கொண்டு வருவாங்க, அதுக்கான அடிக்கல் நாட்டுவாங்க. அதுக்கப்புறம் தேர்தல் வரும், தோத்துருவாங்க. கேட்டா 'எங்க ஆட்சிதான் முடிஞ்சிருச்சே' அப்படின்னு நாடகமாடுவாங்க.

மக்கள் மேல உங்களுக்கு உண்மையிலேயே அந்த அக்கறை இருந்துச்சுன்னா, ஆட்சிக்கு வந்த உடனே இந்த மாதிரி பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் தொடங்க வேண்டியதுதானே?. அதென்ன ஆட்சி முடியும்போது அடிக்கல் நாட்டுறது? ஓட்டுக்காக என்னென்னமோ பேசுவீங்க. ஆனா மக்கள் இதெல்லாம் நம்புறதுக்கு அவங்க என்ன ஏமாளின்னு நினைச்சீங்களா?.

மக்களே அடுத்து நம்மளுடைய ஆட்சி அமைந்ததும் இந்த மாதிரி பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் உடனே தொடங்குவோம். அதை அந்த 5 வருஷத்துக்குள்ள முடிக்கவும் முயற்சி பண்ணுவோம். இப்படிலாம் நம்ம பேசுனா, காவிரி பிரச்சினையில உன் கருத்து என்ன? முல்லைப் பெரியாறு பிரச்சினையில உன் கருத்து என்ன?  அதெல்லாம் பத்தி உனக்கு என்ன தெரியும்னு கேட்க ஆரம்பிச்சுருவாங்க.

ஐயா உலக மகா மேதைகளே, தொலைதூரத்தில் இயக்கப்படும் வாகனம்  (Remotely Operated Vehicle) அதை வச்சு தண்ணிக்குள்ளேயே போயி அணைகளோட உறுதித்தன்மையை ஆராய்ஞ்சு பார்க்கிற வரைக்கும் நானும் எல்லாம் தெரிஞ்சு தான் வச்சிருக்கிறேன். உரிய இடத்துக்குப் போய் சம்பந்தப்பட்டவங்களோட பேசி அதுக்கான தீர்வு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அதை முறையாக செயல்படுத்த வேண்டும். கடல் விவசாயிகளான மீனவர்களோட பிரச்சினைக்கு அப்பப்ப எழுந்து கடிதம் எழுதிட்டு திரும்ப தூங்க போயிடுவார். அவ்வளவுதான். அதோட அது அப்படியே கிடக்கும்."மானே, தேனே, பொன்மானே. இப்படி எல்லாம் கடிதம் எழுதுறதெல்லாம் வேலைக்கு ஆகாது. மத்திய அரசுக்கு உண்மையான, உணர்வுப்பூர்வமான அந்த அழுத்தத்தைக் கொடுக்கணும்.

மீனவர்களே, அடுத்து நம்முடைய ஆட்சி தான். கவலைப்படாதீங்க, தைரியமா இருங்க. உங்களுக்கான பாதுகாப்பு, பக்காவா இருக்கும். இப்படி இருக்கும்போது அடுத்ததும் நாங்க தான் அப்படின்னு முதல்வர்.சொல்வார். அதெல்லாம் நடக்கவே நடக்காது. 2-வது முறை வந்ததெல்லாம் சரித்திரமே கிடையாது. சீனாவுல, சீனப் பெருஞ்சுவரை பற்றி கேள்விப்பட்டிருப்பீங்க. அதனுடைய நீளத்தை விட பெரிய டாஸ்க் இது. அவங்க அப்பாவாலயே முடியவில்லை.

நான் முன்னாடியே சொன்ன மாதிரி உரிய இடத்துக்குப் போய் சம்பந்தப்பட்டவங்களோட பேசி அதுக்கான தீர்வு என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அதை எக்ஸிக்யூட் பண்றதுதான் ஒரு தெளிவான அரசியல். சும்மா ஆறுதல் சொல்றதெல்லாம் தெளிவான அரசியல் கிடையாது.   அரசியலுக்கு வந்துட்டா கலெகஷன் பார்க்கலாம் அப்படின்றதெல்லாம் அரசியல் கிடையாது. உண்மையிலேயே மக்களுக்கான அந்த உழைப்பு இருக்கணும். அதனாலதான் நாம அரசியலுக்கு வந்திருக்கிறோம். இது எதிரிகளுக்கு நல்லாவே தெரியும. அதனாலதான் நம்மள சுத்தி அத்தனை சதிகள். அதுல முக்கியமான சதி என்ன தெரியுமா?  ஒன்னு நீ, இல்லன்னா நான். நமக்குள்ள வேற எவனும் நடுவுல வந்துரக்கூடாது. நாம ரெண்டு பேரால மட்டும்தான் மக்களை எளிதில் ஏமாத்த முடியும். இந்த விஜய் வந்ததுனால நமக்கு பொழப்பே போச்சு. மக்கள் வேற அவனைதான் நம்புறாங்க. நாம வெளிய அடிச்சிக்கிற மாதிரி அடிச்சிக்கிட்டாலும், உள்ள நம்ம டீலிங் பக்காவா இருக்கணும்.

மக்களோட பீலிங்ஸ பத்தி எல்லாம் நமக்கு கவலை இல்லை, நமக்கு டீலிங்தான் முக்கியம். மாத்தி மாத்தி ஆட்சிக்கு வந்துரலாம்னு நெனச்சோம். ஆனா அது நடக்காது போல இருக்கு. அதனால நீ என்ன பண்ற? சோப்பு போட்டு ஒரு பக்கம் அவன தடுத்துரு, இன்னொரு பக்கம் அவன் மேல பழி மேல பழி மேல பழி போட்டு நானும் தடுத்துறேன். என்ன ஓகேவா? டீலிங் ஓகேவா?

நீங்க உண்மையிலேயே... சிரிக்கிறதா, என்ன பண்றதுன்னு தெரியல. உண்மையிலேயே இப்படித்தான் இருக்கு அவங்க டீலிங் எல்லாம். இப்படி 'பழி மேல பழி' போட்டு கரூரில் ஆரம்பிச்சு, நம்ம 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் வரைக்கும். ஆனா அந்த ரிலீஸ் சி நிறைய பேர் குரல் கொடுத்தாங்க. முக்கியமா நம்மளுடைய முதல்வர்  கூட பூசி மெழுகி, பட்டும் படாமலும் குரல் கொடுத்தாங்க. குரல் கொடுத்த அவங்களுக்கும் மத்தவங்க எல்லாருக்கும் இந்த நேரத்துல என்னுடைய நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்."

நீங்க இந்த விஜய்யை முடக்கலாம், ஆனா ஒவ்வொரு வீட்டுல இருக்கிற ஒவ்வொரு விஜய்யையும், ஒவ்வொரு விஜியையும் உங்களால முடக்கவே முடியாது! அவங்க எல்லாம் பிரசாரத்தை தொடங்கிட்டாங்க. வீட்டிலேயே குடும்பம், குடும்பமா இறங்குவாங்க தென் தமிழகத்தில் ஒரு ஊர்ல உங்க அப்பாவுக்கு வெங்கலச் சிலை வைக்கணும்னு முயற்சிபண்ணீங்கல்ல? அதுக்கு சுப்ரீம் கோர்ட்டு மக்களோட பணத்துல யாருக்கு புகழ் பாட. பாக்குறீங்க?' அப்படின்னு கேட்டாங்கல்ல? அதுக்கு என் அர்த்தம் தெரியுமா? 'ஊரான் வீட்டு நெய்யிலே, உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்கன்னு  அர்த்தம். இவ்வாறு அவர் பேசினார்.

Read Entire Article