தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அடுத்தாண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். வரும் டிசம்பர் மாதம் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் தனது சுற்றுப்பயணத்தை நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

அஜித் படத்தில் கையெழுத்திட்ட விஜய்:

அந்த வகையில் இன்று விஜய் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நாமக்கல்லில் அவரை காண்பதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர். அப்போது, விஜய்யிடம் தவெக தொண்டர் ஒருவர் விஜய் - அஜித் இருவரும் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய் - அஜித் இருவரும் கைகோர்த்து நடந்து வரும் புகைப்படத்தை வழங்கினார்.

அந்த புகைப்படத்தை பெற்றுக்கொண்ட விஜய் அதில் பிரியமுடன் விஜய் என்று கையெழுத்து இட்டு அந்த தொண்டருக்கு வழங்கினார். அந்த புகைப்படத்தில் ஏகே/ டிவிகே என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் ரஜினிகாந்திற்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை தன்னகத்தே கொண்டுள்ள இரண்டே நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவர் மட்டுமே ஆவார்கள்.

அஜித் ரசிகர்களின் வாக்குகள்:

அஜித் படத்தை பரிசளித்த தொண்டர்! விஜய் செய்த சம்பவம்!#Vijay #TVK #ajith #ajithkumar #ABPNadu #ABPNews #ஏபிபிநாடு pic.twitter.com/AZl1ZYlb9g

— ABP Nadu (@abpnadu) September 27, 2025

திரையுலகில் விஜய் மற்றும் அஜித் இருவர் மட்டுமே ஒருவருக்கு நிகர் ஒருவர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவிற்கு புகழ்பெற்ற நடிகர்களாக திகழ்பவர்கள். இவர்களது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாக சண்டையிட்டு வந்த சூழலில், தவெக-வினர் வெற்றிக்கு பிற நடிகர்களின் ரசிகர்களின் வாக்குகள் தேவைப்படுகிறது.

அந்த வகையில், விஜய்க்கு வரும் தேர்தலில் அஜித் ரசிகர்களின் வாக்குகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனால், விஜய் பரப்புரை செல்லும் இடங்களில் விஜய் - அஜித் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களும், பேனர்களும் வைக்கப்பட்டு வருகிறது.

அஜித் ரசிகர்களை கவர தவெக வியூகம்:

இது அஜித் ரசிகர்களை கவரும் விதமாக உள்ளது. விஜய் - அஜித் இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலே படத்தில் மட்டுமே நடித்துள்ளனர். பின்னர். இவர்கள் இருவரும் இணைந்து நேருக்கு நேர் படம் நடிப்பதாக இருந்தது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய பிறகு அஜித் படத்தில் இருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பிற பிரபல நடிகர்களின் ரசிகர்களின் வாக்குகளை கவரவும் தவெக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விஜய் - அஜித் இருவரும் தற்போது தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களாக உலா வரும் சூழலில், விஜய் ஜனநாயகன் படத்துடன் தனது திரை வாழ்வை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். அஜித்தும் கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.