TVK Vijay OPS Alliance: தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

4 months ago 4
ARTICLE AD

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணியும் தீவிரமாக தேர்தல் பணியில் இயங்கி வருகின்றனர்.

விஜய்யுடன் கூட்டணியா?

தமிழ்நாட்டின் முதலமைச்சராக, துணை முதலமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், தற்போது அவரது நிலைமை தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இல்லை. பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்க அவர் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிய பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம் விஜய்யுடன் கூட்டணி வைக்கப்போகிறார் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று மதுரையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், அவருடனான கூட்டணி தொடர்பாக இதுவரை என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று பதிலளித்தார். மேலும், பாஜக-வுடன் மீண்டும் கூட்டணியா? என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்தார். பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரும்போது சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பாஜக-வுடன் செல்வாரா ஓபிஎஸ்?

ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர பலரும் முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக, தினகரன் பாஜக கூட்டணிக்குள் ஓ.பன்னீர்செல்வத்தை கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பாஜக தரப்பில் இருந்தும் ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியும் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு வந்த பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த சந்திப்பு நடக்கவில்லை.

மறுபுறம் கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளாகியும் விஜய்யுடன் யாரும் கூட்டணியில் இணையவில்லை. குறிப்பாக, அவருக்கு பக்கபலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சீமான் விஜய்யை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். வெளிப்படையாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தும் திருமாவளவன் திமுக கூட்டணியிலே இருந்து வருகிறார்.

விஜய்க்கு யார் துணை?

விஜய் தரப்பினர் எதிர்பார்த்த யாருமே விஜய்யுடன் கை கோர்க்காத சூழலில், விஜய் என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், ஓ.பன்னீர்செல்வத்துடன் கரம் கோர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் விஜய்யுடன் இணைவதில் சற்று தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நாளில் இரண்டு முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சந்திப்புக்கு பிறகு அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article