பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:

’’என் நெஞ்சில் குடியிருக்கும் பெரம்பூர் தொகுதி மக்களே..

லட்சுமி நரசிம்மர் கோயிலில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன். எங்கிருந்து வேண்டுமானாலும் பிரச்சாரத்தைத் தொடங்கலாம். ஆனால் நம் வீட்டின் வாசலில் இருந்து தொடங்கலாம் என்று ஆசைப்பட்டேன். வட சென்னையின் அடையாளம் பெரம்பூர்.

தமிழ்நாட்டை காப்பாற்றியே ஆக வேண்டும்

பெண்கள் பாதுகாப்பு இல்லாத, சட்டம் ஒழுங்கு சரியில்லாத, போதைப் பொருள் அதிகம் உள்ள தமிழ்நாட்டை நாம் காப்பாற்றியே ஆக வேண்டும். இந்த நிலைக்குக் கொண்டு வந்தது தீயசக்தி திமுகதான் என்று எல்லோருக்கும் தெரியும்.

இந்த 5 ஆண்டில் திமுக அரசினர் எப்படி நம்மை ஸ்மார்ட் ஆக கொள்ளை அடித்தார்களோ, அதேபோல ஸ்மார்ட் ஆக ஓட்டு போடுங்கள். எப்படியாவது வெல்லலாம் என்று நினைக்கும் திமுக ஆட்சியை தூக்கி எறியுங்கள். கொடுக்கும் எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு அவர்களின் காதிலேயே விசிலை ஊதி அனுப்புங்கள்’’.

இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசினார்.

தவெக தலைவர் விஜயின் பேச்சை நேரலையில் உடனுக்குடன் முழுமையாகக் காண