TVK Vijay: 2026 விஜய் தலைமையில் அமைச்சரவை.. கடைக்கோடி தொண்டனுக்கு எம்எல்ஏ சீட்.. நிர்மல் குமார் அதிரடி..

1 month ago 3
ARTICLE AD

தமிழக வெற்றி கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நிர்மல் குமார் பேச்சு

தமிழக வெற்றி கழகத்தின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் பேசுகையில், தமிழக வெற்றி கழகத்தில் ஒவ்வொரு நகர்வுகளையும் மக்கள் உற்றுநோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திமுக மீது மொத்த மக்களும் எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் கூடினாலே இவர்கள் குடும்பத்திற்காக தான் கூடுகிறார்கள் என்று மக்கள் அரசியல் விட்டு ஒதுங்கி இருந்தார்கள்.

இப்போது த.வெ.கவில் நடைபெறும் சிறு நகர்வுகளை மக்கள் உற்று நோக்குகிறார்கள். 41 பேர் மரணம் தான், நமக்கு பேரடியாக இருந்தது. நம்முடைய தலைவர் இது இதிலிருந்து வாழ்நாள் முழுவதும் இதிலிருந்து மீண்டு வர மாட்டார் என நினைக்கிறேன். மக்கள் எங்களை பார்த்தால் நல்ல வேட்பாளரை போடுங்கள் என சொல்லுவார்கள் என தெரிவித்தார்.

கடை கோடி தொண்டருக்கு வாய்ப்பு

தமிழக மக்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்காது. நூறாண்டுகளுக்கு ஒரு முறை தான் தலைவர் வருவார், அப்படி அரிதிலும் அரிதான தலைவர் ஒருவர் வந்துள்ளார். தமிழ்நாட்டில் கடைக்கோடி பகுதியில் இருக்கும், சுய உதவிக் குழுவில் இருக்கும் ஒரு பெண்மணியை தேர்ந்தெடுத்து, உங்களுடன் 24 மணி நேரம் இருக்கக்கூடிய ஒரு நபரை சட்டமன்ற உறுப்பினர் ஆக்குவார். அந்த நபர் 100% மக்களை பற்றி சிந்திக்க கூடிய நபராக இருப்பார். நெகட்டிவான சிந்தனை இருப்பவர்கள் யாரும், விஜய் உடன் ஒட்ட முடியாது. தவறு செய்தால் அடுத்த நிமிடம் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். மக்களே நீங்கள் தான் மாற வேண்டும் உங்களுடைய எண்ணங்கள்தான் மாற வேண்டும் என தெரிவித்தார்.

"பணம் கொடுத்து வேலை வாங்குகிறார்கள்"

கட்டமைப்பை குறித்து பலரும் பேசுகிறார்கள், தமிழக வெற்றி கழகத்திற்கு இருக்கக்கூடிய கட்டமைப்பு வேறு எந்த கட்சியிலும் கிடையாது. பிற கட்சிகள் எல்லாம் வேட்பாளர் அறிவித்த பிறகு, பூத்தில் வேலை செய்பவர்களுக்கு 5000 கொடுத்தால் தான் வேலை நடக்கும். தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் தாங்கள் எந்த பூத்தில் வேலை செய்ய இருக்கிறோம், என்பது குறித்து முழு தகவலையும் வைத்திருந்தார்கள். சில கட்சிகள் எல்லாம் கூட்டி வந்து ஆட்களை கணக்கு காட்டுவார்கள் அது கட்டமைப்பு கிடையாது.

இங்க இருக்கும் பலரும் முதல் தலைமுறை கட்டமைப்பு அரசியல்வாதிகள். எங்களிடம் பணம் இல்லை எங்களிடம், இருக்கும் ஒரே நம்பிக்கை கோடிக்கணக்கான மக்கள் தலைவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் எங்களது நம்பிக்கை. ஒவ்வொரு படியையும் தடுக்க பல சதி வேலைகள் நடக்கும் பல தடைகள் வரும். 2026 தேர்தலில் அமைச்சரவை எங்கள் தலைமையில் அமைந்தே தீரும் என தெரிவித்தார்.

2000 பேர் பங்கேற்பு

தமிழக வெற்றி கழக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Read Entire Article