TVK Maanadu: த.வெ.க. மாநாட்டுத் திடலில் சிகரெட் விற்பனைக்காக தனிக்கடை - நீங்களே பாருங்க

1 year ago 7
ARTICLE AD

அரசியல் மீது ஆர்வம் கொண்டிருந்த நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம்  கட்சியைத் தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய அவர் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களமிறங்க உள்ளதாக அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழக மாநாடு:

கட்சியைத் தொடங்கிய பிறகு கட்சியின் கொள்கைகள், விஜய்யின் நிலைப்பாடு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கொள்கை மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கு நேற்று இரவு முதலே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். மாநாட்டுத் திடலில் தொண்டர்களின் வசதிக்காக சாப்பாட்டு கடைகள், தண்ணீர் கடைகள் என மக்களுக்காக பல கடைகள் செயல்பட்டு வருகிறது.

த.வெ.க. மாநாட்டில் சிகரெட் கடை:

இந்த நிலையில், இந்த மாநாட்டில் ஒருவர் சிகரெட் கடை வைத்துள்ளார். மாநாட்டுத் திடலில் பல வகையான சிகரெட்டுகளை அவர் விற்பனை செய்து வருகிறார்.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் முதன்முறையாக நடத்தும் அரசியல் மாநாட்டில் கடைக்காரர் ஒருவர் சிகரெட் விற்பனை செய்து வருவதற்கு மற்ற அரசியல் கட்சியினர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மாநாட்டுத் திடலில் நூற்றுக்கணக்ககானோர் கடைகள் போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article