தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், திமுகவிற்கும் இடையேயான மோதல் போக்கு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் உதயநிதியை மீண்டும் சீண்டும் வகையில் தவெக ஐடி விங் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜோசப் விஜய் vs உதயநிதி ஸ்டாலின்
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின் மிகப்பெரிய அளவில் மாற்றம் கண்டிருக்கிறது. முதலமைச்சராக தவெக தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்ற நிலையில், எதிர்க்கட்சி தலைவராகும் வாய்ப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு கிடைத்தது. இப்படியான நிலையில் சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கும், முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும் இடையே கருத்து மோதல் உருவானது. கடந்த ஜூன் 23ம் தேதி பேசிய முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் தோல்வியை மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் - மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து விஷயத்தை திமுக இழுத்தது.
தனிநபர் தாக்குதல் - முகம் சுளிக்கும் மக்கள்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதியை பாலிடால் என தவெக ஐடி விங் கடுமையாக விமர்சித்தது. திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளைச் சொன்னால், அதற்கு ஒருநாளும் பதில் சொல்லத் திராணி இல்லை என அடுத்தடுத்து ட்வீட்களை வெளியிட்டு வெளுத்து வாங்கியது. இதற்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்ற ரீதியில் திமுக ஐடி விங், தொண்டர்கள் களமிறங்க சமூக வலைத்தளப் பதிவுகள் தனிநபர் தாக்குதலாக மாறியது. இதனால் தமிழக அரசியல் இவ்வளவு மலிவாக போய் விட்டதா என மக்கள் முகம் சுளிக்க தொடங்கியுள்ளனர்.
Also Read: 24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
அழுவதை நீ நிறுத்தவில்லையா?
இந்த நிலையில் தவெக ஐடி விங் உதயநிதியை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஓட்டப்பந்தய வீரர் உதவாநிதியே.. வெத்துவேட்டு கிறுக்குத்தனத்தை கெத்து என நினைத்து முறுக்கிவிட்டு மொத்துப்பட்டுத் திரும்பிப்போன புலம்பல் பாப்பா! சம்பவம் நடந்து சரியாக 24 மணிநேரம் கடந்த பின்பும் மூக்குசிந்தி அழுவதை நீ நிறுத்தவில்லையா பாப்பா? கொள்கையை வாடகைக்குவிட்டு கொள்ளையை முழுநேர அரசியலாக்கிய கோபாலபுர கொட்டாவி கொழுந்தே !
ஓட்டப்பந்தய வீரர் உதவாநிதியே..
வெத்துவேட்டு கிறுக்குத்தனத்தை
கெத்து என நினைத்து முறுக்கிவிட்டு
மொத்துப்பட்டுத் திரும்பிப்போன புலம்பல் பாப்பா!
சம்பவம் நடந்து சரியாக 24 மணிநேரம் கடந்த பின்பும் மூக்குசிந்தி அழுவதை நீ நிறுத்தவில்லையா பாப்பா?
கொள்கையை வாடகைக்குவிட்டு
கொள்ளையை… pic.twitter.com/YKDqXf3WRI
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) June 24, 2026
உங்கள் குடும்பத்து லட்சணத்தை உங்கள் குடும்பத்தின் மூத்த வாரிசு மு.க.முத்துவும், மு.க.அழகிரி அவர்களுமே அக்குவேறு ஆணிவேராக ஊருக்கு முன்னால் தோலுரித்திருக்கிறார்கள். தமிழ்நாடே என் வீடு தமிழ் மக்களே என் குடும்பம் என சினிமா எனும் சிகரத்தை உதறிவிட்டு வந்த தலைவரை முதலமைச்சர் நாற்காலி என்கிற இமயத்தில் அமரவைத்திருக்கிறது எங்கள் தமிழ்நாட்டுக் குடும்பம்! இது புரியாமல் அழலாமா புலம்பல் பாப்பா? வாயைத் திறந்தாலே பால்டாயில் வாடை அடிக்கிறது.. பின்குறிப்பு : ஆமா, எங்க உங்க அப்பாவ காணோம்?” என தெரிவித்துள்ளது. இதனால் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்ற பரபரப்பு எழுந்துள்ளது.