Affordable Turbo Engine Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும், டாப் 5 டர்போ இன்ஜின் கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டர்போ இன்ஜின் கார்கள்:

கார்கள் அத்தியாவசியம் என்பதோடு வசதியான பயணம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கானதாகவும் மாறியுள்ளது. குறிப்பாக இன்றைய இளைஞர்கள் வாகனத்தை அதிவேகமாக ஓட்ட ஆர்வம் காட்டுகின்றனர். நெடுஞ்சாலையில் கூடுதல் திறனுடன் செயல்படவும், வாகனங்களை முந்திச் செல்லவும் அதிக இழுவைத் திறன் தேவைப்படுகிறது. அந்த வகையில் உள்ளூர் சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும் டர்போ இன்ஜின் கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றின் வேகம், அம்சங்கள் மற்று வசதிகள் தொடர்பான விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மலிவு விலை டர்போ கார்கள்:

1. சிட்ரோயன் C3

சிட்ரோயன் C3, டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் ரூ.7.58 லட்சம் என்ற ஆரம்ப (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இதன் தனித்துவமான ஃப்ரெஞ்சு ஸ்டைலிங் மற்றும் இளமையான வடிவமைப்பு இதற்கு ஒரு தனி ஈர்ப்பை அளிக்கிறது. இதன் கேபினில் வசதியான இருக்கைகள் மற்றும் ஒரு பெரிய 10.2-இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) ஆகியவை அடங்கும். 110 PS மற்றும் 205 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு லிட்டருக்கு சுமார் 19 கி.மீ. மைலேஜ் தரும் எனக் கூறப்படுகிறது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை 10.72 முதல் 11.1 விநாடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. ஸ்கோடா கைலாக்

ஸ்கோடா கைலாக், ஸ்ப்ளிட் LED ஹெட்லேம்ப்களுடன் ஒரு நவீன, திடமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதன் பிரீமியம் உட்புறம் 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வெண்டிலேடட் இருக்கைகள் மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 115 PS மற்றும் 178 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் 1.0-லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் இன்ஜின் இந்த சப்-காம்பேக்ட் எஸ்யுவியில் இடம்பெற்றுள்ளது. 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகிய ஆப்ஷன்களுடன், லிட்டருக்கு சுமார் 18–20 கி.மீ மைலேஜ் வழங்கும் எனக் கூறப்படுகிறது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை, 10.41 முதல் 11.69 நொடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக ஆறு ஏர்பேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் ஆகியவை நிலையான அம்சங்களாக வழங்கப்படும். ஸ்கோடா கைலாக் டர்போ எடிஷனின் ஆரம்ப விலை ரூ.7.89 (எக்ஸ்-ஷோரூம்) லட்சமாக உள்ளது. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்: Hyundai Neira: 4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?

3. டாடா பஞ்ச்

டாடா பஞ்ச், டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் ரூ.8.29 லட்சம் என்ற ஆரம்ப (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இதன் உறுதியான எஸ்யுவி வடிவமைப்பு மற்றும் அதிக கிரவுண்ட் க்ளியரன்ஸ் ஆகியவை சாலையில் இதற்கு ஒரு கம்பீரமான தோற்றத்தை அளிக்கின்றன. இதன் கேபினில் 10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூஃப் மற்றும் குளிரூட்டப்பட்ட க்ளோவ்பாக்ஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதன் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 120 பிஎஸ் சக்தியை உற்பத்தி செய்து, சிறந்த முடுக்கத்தை வழங்குகிறது. லிட்டருக்கு சுமார் 17–18 கி.மீ. மைலேஜ் தரும் எனக் கூறப்படுகிறது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை 11.1 முதல் 11.56 விநாடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. கியா சைரோஸ்

கியா சைரோஸ் டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் ரூ.8.41 லட்சம் என்ற ஆரம்ப (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. மின்சார வாகனங்களால் ஈர்க்கப்பட்ட இதன் பாக்ஸி போன்ற, எதிர்கால வடிவமைப்பு, இந்த எஸ்யுவிக்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது. கேபினில் நவீன கனெக்டட் ஸ்க்ரீன்கள், காற்றோட்டமான இருக்கைகள் மற்றும் விசாலமான அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. வேரியண்ட்டைப் பொறுத்து, பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள் மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை இடம்பெற்றுள்ளன. சைரோஸ், 120 பிஎஸ் சக்தியை உற்பத்தி செய்யும் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. லிட்டருக்கு சுமார் 17–19 கி.மீ. மைலேஜ் தரும் எனக் கூறப்படுகிறது.

5. கியா சோனெட்

கியா சோனெட், டர்போ-பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனில் ரூ.8.79 லட்சம் என்ற ஆரம்ப (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இதன் தனித்துவமான டைகர்-நோஸ் க்ரில் மற்றும் கம்பீரமான ஸ்டைலிங் இந்த எஸ்யுவிக்கு ஒரு ப்ரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. இதன் கேபினில் இரட்டை 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள், ஒரு சன்ரூஃப் மற்றும் ஒரு பிரீமியம் ஆடியோ சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவை ஸ்டாண்டர்டாக சேர்க்கப்பட்டுள்ளன. சோனெட், 120 PS சக்தியை உற்பத்தி செய்யும் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. லிட்டருக்கு சுமார் 18–19 கி.மீ. மைலேஜ் தரும் என கூறப்படுகிறது.